மோடி அரசு தனது மக்கள் மீது தொடுத்திருக்கும் அடுத்த சர்ஜிகள் ஸ்ட்ரைக் ’பாரத்மாலா’ திட்டம்

இந்தியாவிலுள்ள வளங்களையெல்லாம் பெரிய பெரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
நிறுவனங்கள் சிந்தாமல் சிதறாமல் கொள்ளையடித்துக்கொண்டு போக அல்லும் பகலும் வேலைசெய்துகொண்டிருக்கும் மோடி அரசின் அடுத்த திட்டம் தான் இந்த ’பாரத் மாலா பரியோஜனா’.

இதன்படி கொள்ளையடிக்கும் நிறுவனங்கள் தங்களது பொருட்களை விரைவாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டுசெல்ல பயன்படுத்தும் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு பெயர் தான் ’பாரத் மாலா’. இதன்படி அடுத்த 5வருடங்களுக்கு அதாவது 2022க்குள் நாட்டிலுள்ள பல்வேறு சாலைவழி போக்குவரத்து பாதைகளான பொருளாதார பாதைகள் (Economic Corridors) கடலோரா பாதைகள் (Coastline corridors) துறைமுக பாதைகள் (port corridors) எல்லையோர பாதைகள் (Border Corridors) மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways) ஆகிய அனைத்திலுமுள்ள சுமார் 34,0000 கிலோமீட்டர் சாலையை இணைக்கும் வேலையை சுமார் 5.35லட்சம் கோடி ரூபாய்செலவில் நிறைவேற்ற போகிறார் மோடி..அதற்கான நிதி அறிவிப்பை இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே சாகர்மாலா என்ற பெயரில் இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து கடலோரோ மாவட்டங்களையும் காலிசெய்ய திட்டமிட்டுவிட்ட மோடி அரசு அடுத்து நிலத்தில் வாழுகிறவர்களையும் அப்புறப்படுத்த முடிவெடுத்துவிட்டது. கடலோரத்தில் வாழுபவர்களை அப்புறப்படுத்தினால் (ஒரு பேச்சுக்கு) அவர்கள் தஞ்சமைடைவதற்கு கடல்லாத பகுதி இருக்கிறது. ஆனால் இப்போது கடல்லாத நிலப்பகுதியையும் அழித்துவிட்டால் எங்கே போவது. ஒருவேளை சாகுங்களென்று சொல்கிறார்களா? தெரியவில்லை.

அடுத்து இந்த திட்டத்திற்கு ஆகும் இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து எடுக்கப்போகிறார்களென்றால் அதுதான் மக்கள் மீது மோடி அரசு தொடுக்கும் அடுத்த ’சர்ஜிகல் ஸ்டிரைக்’ அதாவது
2.19லட்சம் கோடியை மத்திய தேசிய நெடுஞ்சாலை நிறுவனமும்
1.06லட்சம் கோடியை தனியாரிடமும்
2.09லட்சம் கோடி மக்கள் வரிபணம் அதாவது பட்ஜெட் மூலமும்

ஆகமொத்தம் மக்களின் வரிபணம் 5.35லட்சம் கோடி ரூபாய் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பெரிய நிறுவன்ங்களின் வளர்ச்சிக்காக விரையமாக்க இருக்கிறது. இன்று மத்திய நிதிஅலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் பண்மதிப்பிழப்பு மற்றும் ஜிஸ்டியால் வரிபணம் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னது உங்களுக்கு இப்போது நியாபகம் வருகிறதா தோழர்கள். அந்த பணம் இப்படித்தான் செலவழிக்கப்படப்போகிறது. 

ஏன் இந்த சாகர்மாலா பாரத்மாலா திட்டங்கள்? 

நேற்று பாரத்மாலா திட்டம் பற்றி சிறு விளக்கம் எழுதியிருந்தோம். அதற்கு பிஜேபிகாரர் ஒருத்தர் ரோடு போடுவதையெல்லாம் எதிர்த்தா எப்படி என்று மிகவும் நியாயமான ஒரு கேள்வியை கேட்டிருந்தார். ஆனால் இந்த ரோடெல்லாம் யாருக்காக எதற்காக போடப்படுகிறது என்பதில் தான் கேள்வியே இருக்கிறது. தங்க நாற்கர சாலை என்று இவர்கள் ஆரம்பித்த திட்டத்தால் எத்தனை ஏக்கர் விவசாய நிலங்கள் காணமால் போனதென்றும், ரோட்டோரங்களில் இருந்த எவ்வளவு மரங்கள் அழிக்கப்பட்டு பருவநிலை மாற்றங்களை எவ்வாறெல்லம் தற்போது இருக்கிறது என்பதும் நித்சர்சனம். அந்த திட்டத்திற்கே நாம் இன்று இவ்வளவு பெரிய அழிவுகளை சந்தித்தொமென்றால் அதைவிட 100மடங்கு பெரிய இந்த திட்டத்தால் எதிர்காலத்தில் என்ன நிகழும் என்ற அச்சம் நம்மை வாட்டுகிறது. இது எல்லாவற்றையும் மீறி இந்திய ஒன்றிய அரசு ஏன் இந்த திட்டங்களை கொண்டுவர முனைகிறது என்பதில் தான் இதன்நோக்கமே இருக்கிறது.

அதாவது மோடி அரசு பதவியேற்றதிலிருந்து ’மேக் இன் இந்தியா’ என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய வளங்களை விற்கும் திட்டத்தை முன்மொழிந்தார். அதன்படி ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று எங்கள் ஊர் வளங்களை எடுத்துக்கொண்டு போங்கள் என்று கெஞ்சி பார்த்தார்.
ஆனால் அவர்கள் அதற்கு உங்கள் வளங்களை எடுத்துக்கொண்டு போவதில் எங்களுக்கு எந்தவித தயக்கமில்லை. ஆனால் எடுத்துக்கொண்டு போக போக்குவரத்து வசதி அதாவது Logistics Performance Index( LPI) உங்களிடமில்லை. அதில் உலகளவில் நீங்கள் 35வது இடத்தில் இருக்கிறீர்கள். பார்க்க படம்1. மேலும் உங்கள் நாட்டில் வரிமுறையும் வெவ்வேறாக இருக்கிறது அதனையும் மாற்றி அமையுங்கள். பின்னர் நாங்கள் தாராளாமாக வந்து உங்கள் வளங்களை கொள்ளையடித்து விட்டு செல்கிறோமென்று சொல்லிவிட்டார்கள்.

எனவே தான் இந்த Logistics Performance Index( LPI) உயர்த்துவதற்காக தான் மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடல்வழி போக்குவரத்தை உயர்த்த சாகர்மால என்ற பெயரிலும், நிலவழி போக்குவரத்தை மேம்படுத்த பாரத்மாலா என்ற பெயரிலும், அடுத்து இரயில்வே சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த அடுத்து புது யோஜனா திட்டம் ஏதேனும் கொண்டு வருவார். அதேபோல வரிமுறையை ஒன்றாக ஆக்கத்தான் ஜிஸ்டி வரிமுறை கொண்டுவரப்பட்டது.


இந்தமேற்ச்சொன்ன திட்டங்கள் யாவற்றிலும் பொதுமக்களுக்கு ஒரு சதவிதமே நன்மை பயக்கும் 99% தீமையே. இன்னும் தெளிவாக சொன்னால் மேற்படி திட்டங்களை மோடி அறிவிக்குபோது வரவேற்று அறிக்கை விட்டவர்கள் யார் யாரென்று பாருங்கள். உலகவங்கி, உலக வர்த்தக கழகம், பெரிய பெரிய கம்பெனி முதலாளிகள் இவர்கள் தான் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பார்கள்.

’பாரத்மாலா’ திட்டத்தின் நோக்கம்:

ரோடு போடுவதற்கு போய் எதிர்க்கிறீங்களேன்னு ரொம்ப அப்பாவியா சிலர் கேட்கிறார்கள். நாட்டில் இன்னும் ஆயிரமாயிரம் கிராமங்களுக்கு சாலை வசதியே இல்லாத இந்தியாவில், இன்னும் சொல்லப்போனால் முதல்வரோ அல்லது பிரதமரோ யாரேனும் ஒருத்தர் வந்தால் இத்ற்கு முன் இங்கு சாலைகள் இருந்தது என்று தெரியுமளவுக்கு ஆயிரக்கணக்கான தரமற்ற சாலைகள் நிரம்பியிருக்கிற இந்தியாவில்.இதையெல்லாம் சரிசெய்ய போகிறமென்று சொல்லி மோடி அவர்கள் பாரத்மாலா திட்டத்தை அறிவித்திருந்தால் ஏன் அதை எதிர்க்கபோகிறோம். ஆனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதற்காக ஏற்கனவே இருக்கிற நான்கு வழிச்சாலையை ஆறு வழி சாலையாக மாற்றுவோமென்று சொல்வதும், ஊருக்கு வெளியே மக்களுக்கு சம்பந்தமேயில்லாமல் பொருட்களை மட்டுமே ஏற்றிக்கொண்டு போகக்கூடிய ரிங்ரோடு அமைப்போமென்று சொல்வதும், மக்கள் பயன்படுத்தாத வழிகளை கண்டுபிடித்து அங்கே கனரக வாகனங்கள் மட்டும் செல்லக்கூடிய புதிய டிஜிடலைஸ் சாலைகளை போடபோகிறோமென்று சொல்லி மக்களின் வரிப்பணம் 5.35லட்சம் கோடி ரூபாயை விழுங்க நினைக்கும்போது தான் இதனை எதிர்க்கவேண்டியாதாகிறது.

சாகார்மாலாவோ, பாரத்மாலாவோ அல்லது இனிவரப்போகும் இரயில்வேசேவை மற்றும் விமானச்சேவைக்கென்று வரும் ஏதேனும் ஒரு திட்டமோ இவையனைத்தும் முழுக்க முழுக்க வர்த்தகத்துக்காக மட்டுமே என்ற அடிப்படையை புரிந்துகொண்டால் தான் மற்றது எல்லாமே புரியும். பார்க்க படம் 01 & 2.இந்த வர்த்தகமும் யாருக்காக உலக வர்த்தக கழகத்தில் இந்தியா போட்டுக்கொண்ட ஓப்பந்ததின் அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தங்கு தடையின்றி வியாபரம் செய்வதற்காகத்தான்.

இந்த திட்டத்தினால் 2022வரை சில ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கலாம் என்பது உண்மையே. ஆனால் 2022க்கு பிறகு இந்த திட்டத்தால் பல்லாயிரம் கோடி பணத்தை ஐந்து பெரிய கட்டட நிறுவனங்கள் சம்பாதித்துவிட்டு கிளம்பும் அவர்களுக்கு இது லாபம் தான். ஆனால் அதில் தற்காலிகமாக வேலையிலிருந்தவர்களின் நிலையென்னவென்று அரசாங்கம் பதில் சொல்லுமா? ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு துறைகளிலுள்ள நம் மக்கள் ஈவு இரக்கமின்றி இரவோடு இரவாக வேலையில்லை என்று திரும்ப அனுப்பப்படும் சூழலில் தெரிந்தே இந்த குழியில் விழுப்போகிறமா?

சாலை போக்குவரத்து, கடல்வழிபோக்குவரத்து, விமானபோக்குவரத்து, இரயில்வே போக்குவரத்து போன்ற என்னென்றவைகளை முன்னேற்றுவது வளர்ச்சி தான். ஆனால் பிரச்சனையே இந்த வளர்ச்சியால் இந்திய மக்கள் யாருக்கும் நன்மையில்லை எனும்போதுதான் இந்த வளர்ச்சி தேவையா என்கிற கேள்வி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிலிருக்கிற 1%பணக்காரர்களை மேலும் மேலும் பணக்காரர்களாக்குவதற்காக 99% இருக்கிற மக்களை வதைப்பது தான் வளர்ச்சியா தோழர்களே? அல்லது அப்படிப்பட்ட வளர்ச்சியை தான் நீங்கள் ஆதரிக்கப்போகிறீர்களா?

Leave a Reply