மொழிப்போர் ஈகியர் மற்றும் முத்துக்குமார் வீரவணக்க கூட்டம்-மதுரை

மொழிப்போர் ஈகியர் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் 27-1-2018 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது.

”ஆரியம் போல் சீரழியா உன் சீரிளமை செயல் மறந்து வாழ்த்துதுமே” எனும் முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கப்பட்டது. தோழர் இந்திரா தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடினார். சிறுவன் நந்தன் திருக்குறள் பாடினார்.
சிறுவன் அமுதன் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து பேசினார்.

தமிழ் மொழி காக்க இந்தி திணிப்பினை எதிர்த்து உயிர் கொடுத்த நடராசன், தாளமுத்து உள்ளிட்ட அனைத்து மொழிப்போர் ஈகியருக்கும், தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவும், தமிழீழ விடுதலைக்காகவும் உயிர்கொடுத்த தோழர் முத்துக்குமாருக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர் பேரறிவாளன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கிட்டுராசா, தமிழ் தமிழர் இயக்கத்தின் தோழர் மருது, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் திலீபன் செந்தில் , உயர்நீதிமன்றத்தில் தமிழ் அமைப்பின் தோழர் பகத்சிங், தோழர் இன்குலாப், மே பதினேழு இயக்கத் தோழர்கள் செல்வா, பாலாஜி ஆகியோர் உரையாற்றினர்.

Leave a Reply