மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்

மதுரையில் மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம்.

ஜனவரி 27, 2018 , சனி மாலை 5 மணி, அவனியாபுரம் பேருந்து நிலையம், மந்தைத் திடல், மதுரை

தமிழீழ விடுதலைக்காக முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தினார். 
தமிழ் மொழி காக்க நடராசன், தாளமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் உயிர் கொடுத்தனர்.
இன்றும் அவர்களின் கோரிக்கை அப்படியே இருக்கிறது. தமிழீழம் அழிக்கப்படுகிறது. தமிழரின் மொழி உரிமை பறிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலையை மீட்கவும், தமிழ்நாட்டின் மொழி, அரசியல், பொருளாதார உரிமைகளை மீட்கவும் அறிவாயுதம் ஏந்துவோம்.
அனைவரும் வாருங்கள். தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் உயிர்நீத்த தோழர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உறுதியேற்போம்.

– மே பதினேழு இயக்கம்
8940110098 | 9884072010

Leave a Reply