பிஜேபி மற்றும் ஹிந்து பத்திரிகையின் ’நீட்’ ஆதரவு பிண்னனி

நீட் எனும் தேர்வு முறையானது அரசு கல்வி நிலையங்களுக்கு முடுவிழா நடத்துவதற்காக
பிஜேபி அரசு செய்கிற ஒரு நடவடிக்கை என்று பலமுறை அதாரத்தோடு பேசியிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் தனியார் பள்ளிகள் குறிப்பாக CBSE பள்ளிகளின் நலனுக்காகத் தான் பிஜேபி அரசு இதை இவ்வளவு மும்முரமாக கொண்டு வருகிறதென்று சொல்லி வருகிறோம். அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் பிஜேபியின் தலைவர்கள் செயல்படுகிறார்கள்.

அதாவது ஓவ்வொரு ஊரிலுமுள்ள CBSE பள்ளிகளின் கூட்டமைப்பான CBSE SCHOOLS MANAGEMENT ASSOCIATION ஜை சேர்ந்தவர்களுடன் மிக நெருங்கிய நட்பு வைத்துக்கொண்டு அவர்களுக்காக அனைத்து வேலைகளையும் பிஜேபியினர் பின்னால் இருந்து செய்து வருகிறார்கள். அதற்கு கைமாறாக ஆர்.எஸ்.எஸ் பயிற்சிக்கு அந்த பள்ளிகளில் இடம் வாங்கிக்கொள்வதும், தேர்தல் நேரத்தில் பணம் வாங்கிக்கொள்வதுமாக தங்களை வளர்த்துக்கொள்கிறார்கள். உதாரணமாக தமிழகம் மற்றும் கேரளாவிலுள்ள இந்த அமைப்பு தலைவர்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரான பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த பெருமை பிஜேபியின் வானதி சினிவாசன் மற்றும் இல.கணேசனையே சாரும். பார்க்க படம் 01&02

 

அதேபோல நீட் தேர்வின் போது தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பிய போது அதனை கேவலமாகவும் தரக்குறைவாகவும் பேசிய பிஜேபியின் நிர்மலா சிதாராமன் தான் நேற்று கோயம்புத்தூரில் நடந்த CBSE பள்ளிகளின் கூட்டமைப்பின் விழாவில் சிறப்பு விருந்தினர் மற்றுமொரு விருந்தினர் வானதி சினிவாசன். பார்க்க படம் 03.

இவர்கள் தான் CBSEபள்ளிகளின் நன்மைக்காக ஓட்டுமொத்த மாணவர்களின் வாழ்க்கையை கெடுத்தவர்கள்.இவர்களுக்கு மேல் இன்னொரு திருடன் இருக்கிறானென்றால் அது ஹிந்து பத்திரிக்கை. இந்த பிஜெபி கும்பல் நேரடியாக CBSE கும்பல்களோடு சேர்ந்துகொண்டு நீட் தேர்வை ஆதரிப்பார்களென்றால். அதையே இந்த ஹிந்து கும்பல் வேறுவழிகளில் செய்யும்.

அதாவது நீட் தேர்வுக்கு ஆதரவாக வரிஞ்சி கட்டிக்கொண்டு கட்டுரைகள் போட்ட இந்த கும்பல். பின் ஊர் ஊராக சென்று நீட் மாடல் தேர்வினை தற்போது நடத்தி வருகிறது. அதுவும் CBSE மற்றும் STATE BOARD ஜை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் மாடல் நேற்று 07.01.18 அன்று தமிழகமெங்கும் நடத்தியது.

இப்படி பிஜேபி மற்றும் ஹிந்து பத்திர்க்கை கும்பல்கள் திட்டமிட்டு அரசு பள்ளிகளை மூடவும், தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவும் வெளிப்படையாக இயங்கி ஓட்டுமொத்த அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறது.

Leave a Reply