குமரி மீனவர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

குமரி மீனவர்களுக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் சார்பாக தஞ்சையில் 23-12-2017 சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர் :
*ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.
*காணாமல்போன மீனவர்களை மீட்க உரிய நடவரிக்கை எடுக்கவேண்டும்
*கடந்த ஒரு மாதக்காலமாக மீன்பிடி தொழிலுக்கு போகாத மீனவக் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரனம் வழங்க வேண்டும்.
* மீனவர்களுக்கு சாட்டிலைட் தொடர்புக்கருவி வழங்கிட வேண்டும்

இப்போராட்டத்தில் தோழர்கள் –
தமிழ்த்தேசிய பேரியக்க தோழர் பழ.ராஜேந்திரன், தோழர் வைகறை, தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் தோழர் அயனாவரம் முருகேசன் மற்றும் தோழர் பழனிராஜன், மதிமுக நகரச் செயலாளர் தோழர் தமிழ்செல்வன், தோழர் அரங்ககுணசேகரன், சமவெளி விவசாய பாதுகாப்பு இயக்க தோழர்கள், தமிழக மக்கள் புரட்சி கழக தோழர்கள் மற்றும் மே 17 இயக்க தோழர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மே 17 இயக்கத்தோழர் பாலாஜி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக பதாகையில் மோடியின் படத்தில் சிகப்பு மையால் கோடுகள் போடப்பட்டு இருந்ததால், காவல்துறையினர் அப்படத்தை அகற்ற வேண்டும் என்றனர். அதற்கு தோழர்கள் மறுப்பு தெரிவித்ததால் அனைத்து தோழர்களையும் கைது செய்தனர்.

Leave a Reply