குமரி மீனவர்களுக்கு மே17 இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் – திருச்சி

குமரி மீனவர்களுக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் சார்பாக திருச்சியில் 23-12-2017 சனிக்கிழமை காலை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர் :

*ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.
*கடந்த ஒரு மாதக்காலமாக மீன்பிடி தொழிலுக்கு போகாத மீனவக் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரனம் வழங்க வேண்டும்.
* மீனவர்களுக்கு சாட்டிலைட் தொடர்புக்கருவி வழங்கிட வேண்டும்

இப்போராட்டத்தில் தோழர்கள் – திருவரங்கம் ந. அண்பழகன், அவைத்தலைவர், பெரியார் பாசறை – தோழர். செகநாதன் (மாவட்டத் தலைவர்) கமலக்கண்ணன் ( மாவட்டச் செயலாளர்) தந்தை பெரியார் திராவிட கழகம் – தோழர். புதியவன், இனை ஒருங்கிணைப்பாளர், திராவிடர் விடுதலை கழகம் – தோழர். சபியுல்லா, SDPI, மற்றும் தோழர். மெய்யப்பன், மே17 இயக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Leave a Reply