இந்துத்துவ கருத்துருவாக்க அடியாட்கள்

இந்துத்துவ கருத்துருவாக்க அடியாட்கள்

உலகம் முழுவதிலும் உள்ள மத அடிப்படைவாத சக்திகளுக்கு கருத்தியல் தளத்திலும், வன்முறை முன்னெடுப்புக்களிலும் பெரும் உதவியாக இருந்து வருவது அமெரிக்க ஏகாதிபத்தியம். கடந்த இரு நூற்றாண்டுகளாக அனைத்து அடிப்படைவாத சக்திகளையும் தனது அரசியல் பொருளாதாரத்திற்காக நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயக்கி வருகிறது. அடிப்படைவாத சக்திகள் ஆயுத பயன்பாட்டிற்கு முன்பே கருத்தியல் வன்முறையை கட்டியமைக்கிறது. எங்கெல்லாம் அடிப்படைவாத சிந்தனைகள் வேறூன்றுகிறதோ அங்கெல்லாம் முதலில் பலியிடப்படுவது பொதுவுடமை சிந்தனையும் சிறுபான்மையின வெறுப்பும் தான். இவ்விரண்டையும் கடந்து தேசிய இன எழுச்சியை அபகரிப்பதும், அழிப்பதுமாக செயல்பட்டும் வருகிறது.

தேசிய இன எழுச்சியின் உறுதிப்பாடு கருத்தியல் தளத்தில்தான் அமைந்துள்ளது. விடுதலை உணர்வுள்ள `ஒவ்வொரு இனமும் தனது தனித்துவமான வரலாறு, பண்பாடு, மொழி போன்றவற்றை மறுகட்டமைப்பு செய்யும் அந்த மறுகட்டமைப்பு ஏகாதிபத்திய சந்தை நலனுக்கு பாதகமாக இருந்தால் ஏகாதிபத்திய அரசு அடிப்படைவாத சக்திகளை தூண்டி விட்டு தேசிய இன எழுச்சியை அழித்தொழிக்கும் அல்லது கருத்தியல் அடயாட்களைக் பயன்படுத்தி அபகரிக்கும். இந்திய பெருங்கண்டத்தின் ஒற்றை சந்தையைப் போற்றி பாதுகாக்க ஏகாதிபத்யம் இந்து அடிப்படைவாத சக்திகளின் வளர்ச்சிக்கு துணைநிற்கிறது. இந்திய சந்தையை மையப்படுத்த சர்வாதிகாரத்தனம் கொண்ட இந்துத்துவமே சரியான தேர்வாக பார்க்கிறது. இந்துத்துவ பாசிஸ்ட் சக்திகளுக்கு கருத்தியல் தளத்தில் பலம் சேர்க்கும் விதமாக பல அமைப்புகள் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. இந்திய பண்பாடு என்பதே ஆரிய வேத சமஸ்கிருத பண்பாடுதான் என்ற ஒற்றை புள்ளியை ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ கும்பல் கட்டியமைக்கறது. இந்திய பெருங்கண்டத்தில் ஆரிய வந்தேரி பண்பாடு ஊடுருவும் முன்பு மிகச் செழுமையான நாகரிகம் இங்கு இருந்தது. அது மெல்ல மெல்ல ஆரியமாயமாக்கப்பட்டது. இந்த வரலாறு உலகமே அரிந்த ஒன்று. மிக அண்மையில் ஆரிய பரவல் குறித்த உறுதித் தன்மையை மரபணுவியல் ஆய்வு மிக திட்டவட்டமாக முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆரிய பண்பாட்டின் அடித்தளமாக விளங்குவது வேத சமஸ்கிருத பிராமணிய பண்பாடுதான் இவற்றுக்கு நேர் எதிராக ஆரியர் அல்லாத நாகரிகத்தின் எச்சம் இந்திய துணைகண்டம் முழுவதும் சிதறிக்கிடந்தது. ஆயிரக்கணக்கான வருடமாக ஆரிய வேத சமஸ்கிரும் அந்த எச்சங்களை தனக்குள் உள்வாங்கிக்கொண்டு வருகிறது. இந்த பண்பாட்டு ஆக்கிரமிப்பிற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தமிழ்நாடு. ஆரியர் அல்லாத பண்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தில் தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, அடையாளம் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் தந்தை பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் தமிழர்களை ஆரிய பண்பாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாத்தது. சாமானிய, மனிதனும் தான் ஆரியன் அல்ல என்ற விவாதத்தை பொது தளத்தில் உருவாக்க ஏதுவாக இருந்தது. இதன் நீட்சியை கல்விப்புலத்திலும் ஆய்வுதளத்திலும் ஆரியர் அல்லாத நாகரிகத்தின் அடையாளத்தை மீட்டெடுக்க திராவிட கட்சிகள் தவற விட்டன. ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக ஆரியம், கருத்தியல் தளத்திலும் ஆய்வுகளத்திலும் தன்னை ஆழமாக நிலை நிறுத்தி வருகிறது. இந்திய துணைகண்டத்தையும் தாண்டி அமெரிக்க, ஐரோப்யிய கல்வி நிறுவனங்களிலும் அது தன்னை பரப்பி வருகிறது. ஆரிய நாகரிகம்தான் இந்திய துணைக்கண்டத்தின் ஒரே பூர்வகுடி நாகரிகம், பிராமணிய உயர்சாதி பண்பாடுதான் இந்திய துணைக் கண்டத்தின் பண்பாடாக கட்டியமைக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்துத்துவ போலி ஆய்வாளர்களை கொண்டு நிறுவி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் அடிப்படைவாத சக்திகளின் துணையுடன் துவங்கப்பட்ட INFINITE FOUNDATION OF AMERICA எனும் அமைப்பு அமெரிக்காவில் மிகப்பெரிய கருத்தியல் தீவிரவாதத்தை போலி ஆய்வாளர்களைக் கொண்டு பரப்பி வருகிறது. இவ்வமைப்போடு சேர்ந்து கொண்டு அமெரிக்க இந்து பல்கலைக்கழகம் (HINDU UNIVERSITY OF AMERICA), விவேக் பொதுநல கல்வி நிதியம் (VIVEK WELFARE & EDUCATIONAL FUND), உலக வேத கல்வி சங்கம் (WORLD ASSOCIATION FOR VEDIC STUDIES) போன்ற இந்துத்துவ அமைப்புகள் மிகத்தீவிரமாக கருத்தியல் உருவாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்புகளுக்கு அமெரிக்காவில் பல பன்னாட்டு நிறுவனங்கள் நிதி பங்களிப்பு செய்து வருகின்றது. குறிப்பாக இந்திய வம்சாவளி வணிகர்களான மார்வாடிகளும், குஜராத்தி பனியாக்களும் நிதியுதவி செய்கின்றனர். INFINITE FOUNDATION OF AMERICA பெரும் தொகையான நிதியை வசூல் செய்து அமெரிக்காவில் செயல்படும் பல கல்வி நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் நன்கொடையாக கொடுத்து இந்துத்துவ கருத்தியலை வலுப்படுத்த ஆதரவு திரட்டி வருகிறது.

இந்தியா என்பது இந்துக்கள் தேசம், வேதமே இந்தியாவின் மைய சிந்தனை, சமஸ்கிருதம் அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய், ஆய்ர்வேத, யோகம், வாணவியல் சாஸ்திரம் போன்ற அனைத்தையும் ஒரே மைய புள்ளியில் வைத்து இவ்வனைத்தையும் பாதுகாப்பது பார்பனர்கள். அவர்களே மேலானவர்கள் என்ற கருத்தியலை பல்கலைக்கழகங்களில் கல்வி நிறுவனங்களில் நிலைநாட்ட பல லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக INFINITE FOUNDATION கொடுக்கிறது. அமெரிக்காவில் இவ்வமைப்பின் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருபவர் ராஜிவ் மல்கோத்ரா என்பவர் தான். அமெரிக்காவில் மிகப்பெரிய ஆரிய இந்துத்துவ கருத்தியல் அடியாளாக வலம்வருபவர் இந்த ராஜிவ் மல்கோத்ரா. தென்கிழக்கு ஆசியா குறித்த நேர்மையான பல ஆய்வாளர்களை வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் துணையோடு மிரட்டியிருக்கிறார். அக்னி கோத்தாரி, பால் கோர்ட்(PAUL COURTRIGHT), கிலர்மண்ட் மேக்கேன்னி (CLARMONT MCKENNY) டோங்கர்(WEDY DONGER) நுசும்பம் (MARTHA NUSSBAUM) JEFFERY KARIPAL போன்ற பல பேராசிரியர்களை அடியாட்களின் துணைகொண்டு மிரட்டியதாக வழக்குகள் உள்ளது. இப்படிப்பட்ட கருத்தியல் அடியாலான ராஜிவ் மல்கோத்ரா சென்னையில் INFINITE FOUNDATION OF INDIA எனும் அமைப்பை 2016ம் ஆண்டு துவங்கினார். இவ்வமைப்பு தமிழ் நாட்டில் துவங்கியதான் முழுநோக்கமே ஆரியர் அல்லாத பண்பாட்டின் பிரதிநிதியாக விளங்கும் தமிழ் ஆய்வு சூழலை அபகரிக்கும் திட்டம்தான். இவர்களின் வேலைத்திட்டம் பலவடிவில் திட்டமிடப்பட்டுள்ளது. விரிவுரை, கருத்தரங்கு, பயிர்ச்சிப்பட்டறை, மாநாடு போன்ற வடிவங்களில் தமிழகத்தில் உள்ள கல்லூரி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு தளத்தில் ஆரிய வேத மரபை புகுத்த திட்டமிட்டு செயல்படத் துவங்கியுள்ளனர். குறிப்பாக INFINITE FOUNDATION நடத்தும் சுதேசி இந்தோலஜி (SWADESI INDOLOGY CONFRENCE) எனும் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது அக்கருத்தரங்தில் ஆரிய இந்துத்துவத்தை வளர்க்கும் விதமாக பல ஆய்வுகட்டுளைகளை சமர்பித்து போலியாண பல கருத்தியல் கட்டுமானங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

இந்த சுதேசி இந்தோலஜி கருத்தரங்கின் நோக்கமே இன்னும் சில ஆண்டுக்குள் 108 இளம் ஆரிய இந்துத்துவ ஆய்வாளர்களை உருவாக்குதல் அவற்றினுடாக ஒருதலைப்பட்சமான பல ஆய்வுகளை தமிழகத்தில் பரவச்செய்வதுதான். இவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மிக முக்கியமான நான்கு தளங்கள்.
• வேதம், உபநிடதம், புராணம் (அடிப்படை உறுப்புகள்)
• வர்ணாசிரமம், புருசரதா (வாழ்வியல் கொள்கை)
• சாஸ்திரம், காவியம், கலா (கலாச்சார அறிக்கைகள்)
• கோயில், சடங்கு சம்பிரதாயம், திருவிழா, கலை சிற்பங்கள், கும்பமேளா (சனாதன தர்மம்)
இந்த நான்கு அடிப்படைகளை அடித்தளமாக வைத்து பன்னிரண்டு தலைப்புக்களில் ஆய்வுகள் நடத்த வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.

1. Studies of shastras, practices, systems (including interpretation, translation):
1. itihas, puranas, Dharmashastras, Arthashastra, etc
2. Aagama – evidence of unity through architecture, rituals, symbolism, dance, arts, etc.
3. Natya shastra, rasa and performing arts
4. Nyaya, linguistics, etc.
5. Tantra, yoga and other embodied practices
2. Aryan/Dravidian issues:
1. History of Dravidianism, emergence of Aryan/Dravidian studies.
2. Theories and counter theories.
3. Rise of Dravidian politics in Tamil Nadu.
4. Spiritual streams in Tamil Nadu and their relation to modern Tamil society
5. Linguistics: Tamil-Sanskrit relations
6. Literary & philosophical unity of Tamil culture with Hinduism (Shaiva siddhanta, Vaishnavism, Tirrukural)
3. Jati, varna and caste: Traditional views, evolution of new views, political issues and remedies. Genetic/DNA studies on unity of Indians – many controversial claims and counter claims.
4. Women’s studies: traditional families, roles of women and evolution over time, modern situation, Western feminism and its impact on society.
5. Relationship of Buddhism, Jainism and Hinduism
6. Indian social fault lines, NGOs and foreign nexuses
7. Western Indology & Western Universalism:
1. Purva paksha and response to Subalternism, Postmodernism, Freudian psychoanalysis, Feminism & Neo-Orientalism
2. Purva paksha and response to distortions of sacred texts/practices
3. Mimamsa and Western philology
4. Distortions of Vedanta, Yoga
5. Vyakarana sastra and western linguistics
8. Modern South Asian Studies in the West: Academics, Church, USCIRF, think tanks, funding agencies.
9. Minority studies: Foreign-origin religions of India; relationships with foreign base and with Bharat.
10. Study of inculturation, digestion and the related socio-politics.
11. Chronology of ancient history
12. Archaeology.
இவ்வமைப்பின் முதல் கூட்டம் ராஜிவ் மல்கோத்ரா தலைமையில் 2016 ஆண்டு ஜீலை 6 முதல் 8 தேதிவரை நடந்தது. இதில் சமஸ்கிருதம் குறித்தும் ராமாயணம் குறித்தும் மிக நீண்ட விவாதம் நடத்தப்பட்டு பல ஆரிய சார்பு தன்மையான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஆரிய வேத சிந்தனை மரபுக்கு பலம் சேர்க்கும் வேலை நிகழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து 2017 பிப்ரவரி மாதம் 17 முதல் 19ம் தேதி வரை புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய கலைக் கூடத்தில் (INDIRA GANDHI NATIONAL CENTRE FOR THE ARTS) நடத்தப்பட்டது. இதில் சுப்ரமணியசாமி சிறப்புரையாளராக கலந்து கொண்டார்.

சுதேசி இந்தோலஜி கருத்தரங்கின் மூன்றாவது கூட்டம் வருகிற டிசம்பர் 22 முதல் 24-ம் தேதிவரை சென்னை ஐ.ஐ.டி-ல் நடக்க உள்ளது. இதன் தலைப்பு “தமிழ்நாடு தர்மத்தின் நிலம்” (TAMILNADU THE LAND OF DHARAMA) இக்கருத்தரங்கில் ராஜிவ் மல்கோத்ரா சிறப்புரை ஆற்றுகிறார்.
.
இக்கருத்தரங்கில் நாகசாமி எனும் ஆரிய வேத சார்பு ஆய்வாளர் உறை நிகழ்த்த உள்ளார். இவர் தமிழ் பண்பாட்டு ஆய்வு தளத்தில் பல குளறுபடிகளை நிகழ்த்தியவர். தமிழர்களுக்கு ஒரு தனித்துவமான மெய்யியல் இல்லை, தமிழ் பண்பாடு ஆரிய வேத மரபின் எச்சம்தான் என்று தெடர்ந்து பிரச்சாரம் செய்பவர். தமிழகத்தில் பார்ப்பனிய ஆரிய சக்திகளின் மிக நெருக்கமானவர். தமிழ் தொல்லியல், வரலாறு, மொழியியல் பொன்ற அனைத்து தனித்துவத்தையும் நிராகரிப்பவர். “தமிழ்நாடு வேதத்தின் நிலம்” என்ற இவரது புத்தகத்தின் மீது பரவலாக பல விமர்சனம் எழுந்தது. நாகசாமி காஞ்சி மடத்துக்கு மிக நெருங்கியவர் திருப்பதி கோவிலில் பொறிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுக்களை காஞ்சி மடத்தின் துணையோடு மறைத்தவர். இது போன்று பல அறிவு ஒழுக்கமற்ற செயல்களை செய்துவருபவர்.

அதே கருத்தரங்கில் திராவிட மாயை சுப்பு எனும் ஆய்வாளர் பேசுகிறார். இவர் திராவிட மாயை எனும் புத்தகம் எழுதியவர். இக்கருத்தரங்கில் ஆரிய வந்தேரி கருத்தியலை பற்றிய சிறப்புரையும், ஆரிய எதிர்ப்பான திராவிட கருத்தியலை பற்றிய உரைகளும் நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின் மிக முக்கியமான நோக்கமே ஆரிய வேதமரபுக்கு எதிர்ப்பான திராவிட கருத்தியலை தமிழர்களுக்கு எதிர்ப்பாக மாற்றுதல் அதனூடாக தமிழ் தேசிய சிந்தனையை ஆரிய வேத சமஸ்கிருத பண்பாட்டிற்குள் இணைத்துக் கொள்ளுதல், பார்ப்பனியத்தை தமிழர்களின் நட்பு சக்தியாக உருவாக்குதல் போன்ற பல உள்நோக்கத்துடன் இக்கருத்தரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கின் மைய புகைப்படமே தமிழன்னை எனும் குறியீட்டையும் திருவள்ளுவர் என்ற ஆளுமையையும் ஆரிய வேத மரபுக்குள் கொண்டுவரும் நோக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் ராஜிவ் மல்கோத்ரா ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் மிக நெருங்கியவர். இந்தியாவில் உள்ள அனைத்து கார்ப்பரேட் சாமியார்களுக்கும் மிக நெருங்கியவர். பா.ஜ.கவின் மிகப்பெரிய ஆதரவாளர் இவர். இக்கருத்தரங்கை சென்னை ஐ.ஐ.டியில் நிகழ்த்துவதற்கான முக்கிய காரணமே சென்னை ஐ.ஐ.டியில் அம்பெத்கர் பொரியர் வட்டம் துடிப்புடன் செயல்பட்டு வருவதை மட்டுப்படுத்தவே. அதேபோல் ஐ.ஐ.டி பார்ப்பனர்களின் கூடாரமாக விளங்குவதால்தான் இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய கருத்தரங்குகளுக்கு அனுமதி கிடைக்கிறது. ஒருபுறம் இதுபோன்ற கருத்தரங்குகளும், மறுபுரம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நேரடியாக தனது வருடாந்திரக் கூட்டத்தை கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடத்தியது. ஆர்.எஸ்.எஸ் அடிப்படைவாதிகளும், கருத்தியல் அடியாட்களும், கார்ப்பரேட் சாமியார்களின் துணையுடன் தமிழ் மண்ணில் காலூன்ற முழு மூச்சுடன் செயல்பட்டு வருகின்றனர். இதை கவனமாக புரிந்து செயல்பட்டால் மட்டும் தான் தமிழ்தேசிய எழுச்சியை, ஆரிய இந்துத்துவ அடிப்படைவாத சக்திகளிடமிருந்து பாதுகாக்க முடியும். ஆரிய பார்ப்பனிய எதிர்ப்பை பிரதான எதிர்ப்பாக முன்வைக்காமல் தமிழ்த்தேசிய எழுச்சியை பாதுகாக்க முடியாது.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply