கூடுவாஞ்சேரியில் குமரி மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம்

குமரி மீனவர்களைக் காக்காமல் படுகொலை செய்த இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கூடுவாஞ்சேரியில் 16-12-2017 சனி அன்று மாலை மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது.

தமிழக மீனவர்களை இனப்படுகொலை செய்கிறதா இந்திய அரசு என்று தோழர்கள் கேள்வி எழுப்பினர். முன்னறிவிப்பினை செய்யாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், தேடுதல் பணியை விரைந்து நடத்தாமல் பச்சைப் படுகொலையினை இந்திய பாஜக அரசும், தமிழக அரசும் இணைந்து நிகழ்த்தியிருக்கிறது.
எடப்பாடியும், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமனும் பதவி விலக வேண்டுமென தோழர்கள் தெரிவித்தனர். WTO-ல் தமிழர் கடலை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எழுதித் தருவதற்காக மீனவர்களை கடற்கரையை விட்டு இந்திய அரசு வெளியேற்றி வருவதாகவும் தோழர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் ரவிபாரதி, தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழகத்தின் கூடுவாஞ்சேரி நகர செயலாளர் தோழர் ஹைதர் அலி, மறைமலைநகர் தமிழீழ உணர்வாளர் கூட்டமைப்பின் தோழர் ஆனந்த் சுகுமார் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல் சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Leave a Reply