சென்னையின் பூர்வகுடி மக்களை வெளியேற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னையிலிருந்து ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் குடிசைகளை அகற்றி, அவர்களை சென்னையை விட்டு வெளியேற்றி அவர்களின் வாழ்வினை கேள்விக்குறியாக்குவதைக் கண்டித்து “அனைத்து குடிசை பகுதி குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு” சார்பில் (15-12-2017 அன்று) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது. இதில் இந்திய குடியரசு கட்சியின் தோழர் அன்புவேந்தன் தலைமை தாங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் நல்லக்கண்ணு, SDPI கட்சியின் தோழர் தெகலான் பாகவி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.
மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி உரையாற்றினார்.

Leave a Reply