தமிழர் உரிமையும் தற்சார்பு தமிழ்நாடும் – ஓசூர் கருத்தரங்கம்

தமிழர் உரிமையும், தற்சார்பு தமிழ்நாடும் என்ற பெயரில் ஓசூரில் 10-12-2017 அன்று மாலை 6 மணியளவில் ஓசூரில் கருத்தரங்கம் மே பதினேழு இயக்கத்தினால் நடத்தப்பட்டது. இதில் தற்சார்பு என்பது என்ன, தற்சார்பாக தமிழ்நாடு மாறுவதை தடுக்கும் காரணிகள் எவை. தற்சார்பு தமிழ்நாட்டை எப்படி உருவாக்குவது என்பது குறித்து மே பதினேழு இயக்கத் தோழர்கள் விவேகானந்தன், பிரவீன்குமார், திருமுருகன் காந்தி ஆகியோர் விரிவாக உரையாற்றினர். அரசியல், பண்பாடு, பொருளாதாரம் என பல்வேறு தளங்களில் தற்சார்பினை அடைவது குறித்து தோழர்கள் கருத்துக்களை முன்வைத்து பேசினர். தமிழ் உணர்வாளர் தோழர் வையம்பட்டி முத்துசாமி அவர்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்தான விழிப்புணர்வுப் பாடல் ஒன்றைப் பாடினார். குமரி மீனவர்களுக்காக நாம் போராட வேண்டியதன் அவசியம் குறித்து தோழர்கள் வலியுறுத்தினர். இதில் ஓசூரைச் சேர்ந்த பல்வேறு முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply