குளச்சல் மற்றும் தேங்காப்பட்டினம் மீனவர் போராட்டத்தில் மே பதினேழு இயக்கம்

ஒகி புயல் முடிந்து ஒரு வாரத்திற்கும் மேல் கடந்த நிலையிலும் இன்னும் ஏராளமான மீனவர்கள் (1000க்கும் மேற்பட்ட) நிலை என்ன என்று தெரியவில்லை.
மீனவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து மீனவர்கள் போராட்டங்களை பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறார்கள். மே பதினேழு இயக்கத்தின் தோழர்களும் இந்த போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள்.

நேற்று(8-12-2017) வெள்ளிக்கிழமை குமரியில் குளச்சல் பகுதியில் நடந்த போராட்டத்திலும், தேங்காப்பட்டினத்தில் நடந்த போராட்டத்திலும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மே பதினேழு இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

மீனவர்களுக்காக தமிழகம் முழுக்க போராட்டங்கள் எழ வேண்டும் என்று தோழர் திருமுருகன் தெரிவித்தார்.

 

இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மதுரை பெத்தானியாபுரம் குரு தியேட்டர் அருகில் மீனவர்களுக்கு நீதி கேட்கும் போராட்டத்தினை மே பதினேழு இயக்கம் நடத்துகிறது. தோழர்கள் அனைவரும் பங்கேற்கவும்.

Leave a Reply