கார்பரேட்கள் நலனுக்காக அப்புறப்படுத்தப்படும் சென்னையின் பூர்வகுடிகள்

சென்னை மாநகரத்தை உருவாக்கி அதன் பொருளாதாரத்தின் அடித்தளமாக நிற்கும் ஏழை எளிய மக்களை குப்பையைப் போல ஊருக்கு வெளியே எறியும் அராஜக அரசும், நிர்வாகமும். கார்ப்பரேட் கைக்கூலிகளாக சொந்த மக்களை அழித்தொழிக்கும் அயோக்கியத்தனம். நேற்று நாங்கள் நேரில் பார்த்த அவலத்தை பகிர்கிறோம். அநியாயத்தை தடுத்து நிறுத்த குரல் கொடுங்கள்.

நம் நகரின் குடிசை வாசிகளை காக்க ஒன்றாய் கரம் கோர்ப்போம். கிட்டதட்ட 225000 ஏழை மக்கள் அப்புறப்படுத்தப்பட இருக்கிற நிலையில் ஆக்கிரமிப்பு செய்த கார்ப்பரேட்டுகள் லாபம் கொழிக்கும் தொழில் நடத்தும் அநீதிக்கு எதிராய் குரலை பதிவு செய்யுங்கள். ஆக்கிரமிப்பு அகற்றம் எனும் நீதிமன்ற உத்தரவை கார்ப்பரேட் மீது நடைமுறைப்படுத்தாமல் தவிர்க்கும் அயோக்கியதனத்திற்கு எதிராக ஒன்றாவோம். ஷான் ராயல் ஓட்டல், ஸ்கைவாக் மால், அப்போல்லோ, லீலா பேலஸ் ஓட்டல்கள் பாதுகாக்கப்படுகிறது. அநீதிக்கு எதிராய் ஒன்றாதல் இன்றய தேவை.

அனைவரையும் அழைக்கிறோம்.

இக்காணொளியை பரப்புரை செய்து செய்தியை கொண்டு சேர்க்க உதவுங்கள்

மே பதினேழு இயக்கம்.
9884072010

Leave a Reply