பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(GST) போன்றவற்றால் என்ன செய்திருக்கிறது இந்த மோடி அரசு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி(GST) போன்றவற்றால் என்ன செய்திருக்கிறது இந்த மோடி அரசு என்று இன்னும் நம் மக்களுக்கு புரியவில்லை.

அதாவது மோடி ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்ததே பெரிய பெரிய கார்ப்ரேட் முதலாளிகள் தான். எனவே அவர்களுக்கு கூடுமான அளவுக்கு சேவை செய்வதையே முதல் வேலையாகக் கொண்டு மோடி பணியாற்றிவருகிறார். அவர்களுக்கு சேவை என்றால் என்ன அர்த்தம் அவர்களுக்கு வெளிநாட்டில் சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி வாங்கிகொடுப்பது, வெளிநாட்டு கம்பெனிகளோடு இவர்களை இணைத்து ஆயுதங்கள் தயாரிக்க ஓப்பந்தம் போட்டு கொடுப்பது இப்படி புரோக்கர் வேலை செய்வதை சிரமேற்கொண்டு செய்துவருகிறார்.

மேலும் வெறும் ஓப்பந்தங்களை மட்டும் பிடித்துக்கொடுத்தால் எப்படி அதற்கு தேவையான பணத்திற்கு பாவம் அந்த ஏழை! முதலாளிகள் என்ன செய்வார்கள். அதற்கும் மோடி அவர்கள் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளிலிருந்து பணத்தையும் வாங்கி கொடுப்பார். அப்படி வாங்கிய பணத்தை முதலாளிகள் இதுவரை திரும்ப செலுத்தினார்கள் என்ற வரலாறே கிடையாது. இப்படி இவர்கள் வாங்கி குவித்திருக்கும் கடன் மட்டும் 12லட்சம் கோடிக்கு மேல் இருக்கும்.
இப்படி வாங்கிய பணத்தை முதலாளிகள் திரும்ப செலுத்தாத காரணத்தினால் வங்கிகள் திவாலாகும் நிலைமைக்கு வரும். உடனே வங்கிகளை காப்பாற்ற எழை! முதலாளிகள் வாங்கிய பணத்திற்கு நாட்டில் பெரும் செல்வந்தராக இருக்கும் நம்மிடமுள்ள பணத்தை பிடிங்கி வங்கிகளின் கடனை அடைப்பார்கள்.

அப்படி திவாலாகவேண்டிய நிலையிலிருந்து வங்கிகளை காக்கவே பணமதிப்பிழப்பு மற்றும் சேவை வரி போன்றவற்றை கொண்டுவந்து நம் பணத்தையெல்லாம் வங்கிகளுக்கு கொண்டு சென்றார் மோடி. இதோ இப்போது வங்கிகளின் கையில் பணம் அதிகரித்த உடன் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிட்டது. கடந்த ஜீன் மாதம் வரை வங்கிகள் கடனாக கொடுத்து திரும்ப வராது என்று முடிவுக்கு வந்த தொகையின் அளவு 9.53லட்சம் கோடியாக மாறியிருக்கிறது. இதில் கொடுமையென்னவென்றால் ஏற்கனவே அதிக கடனிலிருந்த வங்கிகள் மீண்டும் திரும்ப செலுத்தாத கம்பெனிகளுக்கே லோன் கொடுத்திருக்கிறார்கள். அதிகபட்சமாக கடந்த 15ஆண்டுகளில் இல்லாதளவுக்கு ஜீன் மாதம் மட்டும் 12.5% அதிகமாக கடனை வாரி வழங்கியிருக்கிறார்கள். அதுசரி எவன் அப்பன் விட்டு பணம். https://timesofindia.indiatimes.com/…/articles…/61030217.cms

இப்போது மீண்டும் வங்கிகள் திவாலாகும் மறுபடியும் மோடி அரசு போட்ட எல்லா கோட்டையும் அழிப்பார்கள்.ஆட்டத்தை மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்பார்கள். ஆகவே மீண்டும் வரிசையில் நிற்க தயாராவோம்.

Leave a Reply