தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது.

மியான்மரில் ரோகிங்கியா இசுலாமியர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், ரோகிங்கியா அகதிகளை வெளியேற்றக் கூடாது என இந்திய அரசை வலியுறுத்தியும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சேலத்தில் 09/10/2017 திங்கள் அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் அப்துல் சமது மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் அஸ்லாம் பாஷா ஆகியோர் தலைமை வகித்தனர்.

Leave a Reply