பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உரிமை முழக்க மாநாடில் மே பதினேழு இயக்கம் பங்கேற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட்ஆஃப் இந்தியாவின் உரிமை முழக்க மாநாடு நேற்று 8-10-2017 ஞாயிறு மாலை சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்றது.

இதில் அந்த அமைப்பின் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் காந்தி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும், முற்போக்கு சக்திகளும், தமிழ்த்தேசியவாதிகளும் நாம் ஒன்றிணைந்து நின்றால் நாம் தான் இந்த மண்ணில் பெரும்பான்மையினர். நாம் ஒன்றிணைந்து இந்த பாசிசத்தினை ஓடச் செய்வோம் என்று பேசினார். தமிழ் மண்ணில் இந்துத்துவ கும்பலின் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது என்றும் பேசினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினை தடை செய்ய முயலும் பாசிச பாஜக அரசினைக் கண்டித்து பல்வேறு தலைவர்களும் உரையாற்றினர். அதனை தடை செய்வதற்காக தொடர்ந்து அந்த அமைப்பின் மீது தொடர்ந்து பொய்யான அவதூறுகளை பரப்பி, அவர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து வரும் தேசிய புலனாய்வு முகமையையும், தேசிய ஊடகங்களையும், ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பல்களையும் தமிழகத்தின் உரிமைக்காக போராடும் பல்வேறு தலைவர்கள் கண்டித்தனர்.

Leave a Reply