தூய்மை இந்தியா என்ற மோடியின் பித்தலாட்டம்

சென்னையின் குப்பை கிடங்குகளான கொடுங்கையூர் மற்றும் பள்ளிக்காரணை குப்பை கிடங்குகளில் பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. இந்த குப்பைகளை சார்ந்து இயங்கக் கூடிய தொழில்களான குப்பையை அள்ளுதல், குப்பைகளை வாங்கும் சில்லறை வணிகர்கள், மொத்தமாக வாங்குபவர்கள், அதை மறுசுழற்சி செய்யும் தொழிற்கூடங்கள், மறுசுழற்சி செய்தவற்றை மீண்டும் தேவையான பொருட்களாக மாற்றும் உற்பத்தி நிலையங்கள் என அனைத்து தொழில்களும் அதை நம்பி வாழ்ந்து வந்த 2லட்சம் நேரடி தொழிலாளர்களும் 4லட்சம் மறைமுக தொழிலாளர்களும் முற்றிலும் முடங்கிப்போய்கிடக்கிறார்கள். காரணம் மத்திய நரேந்திரமோடி அரசு கொண்டுவந்த சரக்கு மற்றும் சேவை வரி.

இந்த வரியில் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இதுவரை 5%மாக இருந்த வாட் வரி விதிப்பை நீக்கிவிட்டு தற்போது 18%மாக வரியை போட்டிருக்கிறார்கள். இதனால் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை யாரும் வாங்குமறுக்கிறார்கள். அதனால் யாரும் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை எடுக்கமாட்டேங்கிறார்கள். அதனால் பிளாஸ்டிக் குப்பைகள் மலை போல் தேங்கிகிடக்கிறது. இதே நிலைமை இன்னும் ஒரிரு மாதங்கள் நீடித்தால் மிகப்பெரிய சுகாதார சீரழிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 5000டன் கழிவுகள் வருகிறது. இதில் 400 டன் அதாவது 8% பிளாஸ்டிக் கழிவுகள். இதில் 90%மறுசுழற்சி செய்யப்பட்டுவருகிறது.

தற்போது இந்த மறுசுழற்ச்சி முற்றிலும் நின்றுபோய் இருக்கிறது. உதாரணமாக மாதம் 20டன் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்துகொண்டிருந்த ஒரு நிறுவனம் தற்போது 7டன் தான் மறுசுழற்சி செய்கிறது. ஏனென்றால் மறுசுழ்ற்சி செய்த பொருளை வாங்க ஆளில்லை காரணம் அதிகப்படியான 18% வரி.

அதேபோல குப்பை அள்ளுபவர்கள் ஒரு நாளைக்கு 12மணி நேரம் வெலை செய்துமாதம் 10000ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று அதே உழைப்பை தான அந்த தொழிலாளி போடுகிறார். ஆனால் அவர் வருமானமோ 4000மாக குறைந்து விட்டது காரணம் கழிவுகளை வாங்க ஆளில்லை.

உதாரணமாக ஒருகிலோ பால் பாக்கெட் பிளாஸ்டிக் கவரின் விலை இதுவரை 20ருபாயாக இருந்தது.அது இந்த 18%வரியின் காரணமாக தற்போது 10ருபாயாக குறைந்துவிட்டிருக்கிறது. இதுபோலத்தான் மற்ற கழிவுகளுக்கும்.

தமிழ்நாட்டில் மட்டும் 8000 பதிவு செய்த பிளாஸ்டிக் கூடங்களும், 10000க்கும் மேற்பட்ட பதிவு செய்யாத பிளாஸ்டிக்கூடங்களும் இருக்கின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 2000கோடி வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 10லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயனடைந்து கொண்டிருந்தார்கள். இதெல்லாம் ஒரே நாளில் இந்த மோடி அரசு நீர்மூலம் செய்துவிட்டது.

யோசித்து பாருங்கள் இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான கழிவுகளை உற்பத்து செய்கின்றோம். இதை மறுசுழற்சி செய்யவில்லை யென்றால் அவ்வளவு கழிவுகளையும் என்னசெய்ய முடியும். இதே நிலைமை நீடித்தால் இந்தியா குப்பைநாடாக மாறுவதை தடுக்க முடியாது.

ஒருபுறம் தூய்மை இந்தியா என்ற பெயரில் ஒரு திட்டத்தை கொண்டு வந்து நாட்டு மக்களுக்கு படம் காட்டிக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கம். மறுபுறம் கழிவுகளுக்கு அதிக வரிபோட்டு இந்தியாவை சுத்தமில்லாமலும் சுகாதாரமில்லாமலும் ஆக்கிக்கொண்டிருக்கிறார்.

ஆதாரங்கள்:

  1.  http://www.newindianexpress.com/cities/chennai/2017/aug/20/18-per-cent-gst-on-recycled-plastic-granules-leaves-rag-pickers-in-distress-1645569–1.html
  2.  http://www.downtoearth.org.in/news/will-india-s-recycling-sector-collapse-under-the-new-gst-regime–58415
  3.  http://indianexpress.com/article/delhi/gst-effect-why-are-capitals-garbage-collectors-refusing-glass-bottles-4765652/
  4.  https://thewire.in/177137/gst-ragpickers-plastic-recycling/

 

Leave a Reply