லட்சக்கணக்கான குழந்தைகளை கொல்ல துணிந்த மோடி அரசு

இந்தியாவில் நுரையீரலை தாக்கும் நிமோனியா தொற்றுநோயால் வருடத்திற்கு இரண்டு லட்சம் குழந்தைகள் இறக்கின்றார்கள். இதனை கட்டுப்படுத்தும் ’தடுப்பூசிகளை’ இந்தியாவிலேயே தயாரித்து ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து இந்த இறப்பு விகிதத்தை குறைக்கவேண்டுமென்பதற்காக யுனிவர்சல் நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் இந்த நுரையீரல் நோய் தடுப்பூசியை (pneumococcal conjugate vaccine) (PCV) கொண்டு வந்தனர்.

இந்த தடுப்பூசி 13வகையான நோய் பரப்பும் பாக்டீரியங்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. இதன்படி இந்த தடுப்பூசியின் விலை 500ரூபாய்க்கு இந்திய சந்தையில் கிடைக்கப்பெற்றது. இது வருங்காலங்களில் இன்னும் விலை குறையுமென்றும் அதனால் இந்த இறப்பு விகிதத்தை குறைக்கலாமென்றும் இந்திய நோய் தடுப்பு துறை
கடந்த மே மாதம் அறிவித்தது.

இதற்கிடையில் அமெரிக்காவானது உலக பொதுவர்த்தக கழகத்தின்(WTO) மூலம் முன்றாம் உலக நாடுகளின் மீது காப்புரிமை சம்பந்தமான சட்டத்தை திணிக்க முயன்றது. அப்போது சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் கடந்த ஜீன் மாதம் 27ஆம் தேதி இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்வுடனான சந்திப்பிற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.

மே மாதம் அரசு நோய் தடுப்பு துறை இந்த தடுப்பூசிக்கான காப்புரிமையை வைத்திருக்குமென்று சொன்ன மோடி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர். மூன்று மாதத்திற்கு பின்னர் அதாவது ஆகஸ்ட் 11’2017 அன்று இந்த ’தடுப்பூசியின்’ காப்புரிமையை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பீ.நாதா அமெரிக்க மருந்து நிறுவனமான பைசர் (Pfizer) நிறுவனத்திற்கு 2026 வரைக்கும் கொடுத்து விட்டொமென்று அறிவித்து விட்டார்.

இந்த பைசர் நிறுவனம் உலகமெங்கும் 2009-2017 காலகட்டங்களில் இந்த தடுப்பூசியால் கொள்ளை லாபத்திற்கு விற்று 35பில்லியன் டாலர் பணம் சம்பாதித்திருக்கீறது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு வருடத்திற்கு இரண்டு லட்சம் குழந்தைகளின் இறப்பை தடுக்கக்கூடிய காப்புரிமையை எந்தவித தயக்கமுமில்லாமல் இந்த மோடி அரசு கொடித்திருக்கிறது.

இதனால் 500ரூபாய்க்கு கிடைத்தவந்த அந்த தடுப்பூசியின் விலை தற்போது 21,000ருபாயாக உயர்ந்திருக்கிறது. இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஏழை மக்களால் தடுப்பூசி வாங்க முடியுமா? அப்படியென்றால் இந்த இரண்டு இலட்சம் என்ற எண்ணிக்கை இனிவரும் காலங்களில் இது மேலும் பல மடங்கு உயரும். இந்தியாவில் குழந்தைகளின் எதிர்காலத்தை இந்த மோடி அரசு அமெரிக்க நிறுவனத்திடம் அடகு வைத்துவிட்டது.

குறிப்புகள்:

https://thewire.in/170285/india-gives-pfizer-patent-for-pneumococcal-vaccine/

https://thewire.in/120122/national-ipr-policy-cautionary-pessimism-continues-washington-d-c/

http://www.thehindubusinessline.com/economy/policy/india-us-lock-horns-over-intellectual-property-at-wto/article9335053.ece

 

Leave a Reply