பெட்ரோல் விலையேற்றம் உண்மையான காரணம் என்ன?

2014இல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 108ரூபாயாக இருந்தது. அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 63.94ரூபாயாக இருந்தது.தற்போது 2017இல் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 56டாலராக அதாவது பாதியளவு குறைந்திருக்கிறது. அப்படியென்றால் பெட்ரோலின் விலையும் பாதியளவு இல்லை குறைந்தளவேனும் குறைந்திருக்க வேண்டுமல்லாவா? ஆனால் அதற்கு நேர் மாறாக மோடி அரசில் தற்போது பெட்ரோல் விலை 72.99ரூபாயாக அதிகரித்திருக்கிறது. பார்க்க படம் 01.

இந்த விவகாரம் தான் கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளால் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை மோடியின் அமைச்சர் சொல்லாமல் பெட்ரோலின் விலை வருங்காலத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்படுமென்று மேம்போக்காக ஒரு பதிலை சொல்லி கடந்துவிட்டார். கச்சா எண்ணெயின் விலை முன்னைவிட பாதியளவு குறைந்திருக்கிற வேளையில் பெட்ரோல் விலை மட்டும் அதிகரித்துக்கொண்டே செல்லுவதற்கான உண்மையான காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்ததில் தான் மோடி அரசின் அயோக்கியத்தனத்தை அறிய முடிந்தது. அதாவது

பெட்ரோல் விலையென்பது கீழ்க்கண்ட அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

1.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 2.கச்சா எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கிற ஆகும் செலவு.
3.மத்திய அரசின் வரி
4.மாநில அரசின் வரி

இதன்படி பார்த்தால் கச்சா எண்ணெயின் விலை பாதியாக குறைந்திருக்கிற நிலையில் குறைந்திருக்க வேண்டிய பெட்ரோலின் விலை மத்திய அரசின் அதிகப்படியான வரியால் குறையவில்லை என்பதுதான் பெட்ரோல் விலையெற்றத்திற்கு பின்னாலுள்ள காரணம். எவ்வளவு வரியை அதிகப்படுத்தி இருக்கிறார்களென்றால் கிட்டதட்ட ஒன்பது மடங்கு வரியை உயர்த்தியிருக்கிறார்கள். பார்க்க படம் 2. இதனால் தான் பெட்ரோல் விலை தற்போது உயர்ந்திருக்கிறது.

மேலும் இந்த மோடி அரசு கொண்டுவந்த ஜீஸ்டி எனும் வரிமுறையை ஏன் பெட்ரோல் டீசலுக்கு பொருந்தாதென்று சொன்னார்களென்றால். அந்த ஜிஸ்டி முறையில் அதிகபட்ச அளவே 28%தான் வரி போடமுடியும். ஆனால் தற்போது பெட்ரோல் டீசலுக்கு மத்திய மற்றும் மாநில அரசி போடும் வரி என்பது கிட்டதட்ட 42.78%.(மத்திய அரசு21.48%, மாநில அரசு 14.98% மற்றவை 6.32%) இவ்வளவு வரியை போட்டு இந்த மோடி அரசு இன்னொரு கேவலமான வேலையையும் செய்திருக்கிறது. அதாவது

மோடி அரசு பதவிக்கு வந்ததிலிருந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எங்களின் சீரிய நடவடிக்கையின் மூலம் நாட்டில் அரசின் நிதிபற்றாக்குறையை குறைத்திருக்கிறோமென்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே வந்தார். இவர்கள் எப்படி இந்த நிதிபற்றாக்குறையை குறைத்திருக்கிறார்களென்றால் பெட்ரோல் டீசல் மீதான வரியை கூட்டி அதில் வரும் வருமானத்தின் மூலம் தான் நிதிபற்றாக்குறையை ஓரளவு குறைத்திருக்கிறார்கள். பார்க்க படம் 3. அதாவது

நாட்டில் பெரிய பெரிய பணக்கார முதலாளிகளுக்கு வரிச்சலுகை, 12லட்சம் கோடி அளவுக்கு அவர்கள் வாங்கி தள்ளிய கடன்களை தள்ளுபடி செய்வதென்று மக்கள் நலத்திட்டங்களுக்கு சேர வேண்டிய வரிப்பணத்தை வாரி இறைத்துவிட்டு. அதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பை சாதாரண ஏழை மக்களிடமிருந்து பிடுங்கி நாங்கள் நிதி பற்றாக்குறையை குறைத்து விட்டோமென்று மோடி சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

Leave a Reply