27 தமிழர்கள் போலி மோதலின் மூலமாக கொலை செய்யப்பட்டதின் அரசியல் பின்னணி

ஆந்திரப் பிரதேசத்தின் பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையேயான அதிகார- கடத்தல் போட்டிக்கு பலியாக்கப்படுகிறார்கள் அப்பாவித் தமிழர்கள். கடந்த சில வருடங்களில் அப்பாவித் தமிழர்கள் ஆந்திர அரசினால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரம் தமிழர்கள் வழக்கு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆந்திராவின் தெலுங்கு தேசம், ராஜசேகர ரெட்டி ஆங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களுக்கு இடையே நிகழும் நிழல் சண்டையின் விளைவாக தமிழர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுகிறார்கள். இதே பின்னணியில் கடந்த 29 மே மாதம் 2014இல் முன்று தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் திருவண்ணாமலையின் போருர் தாலுகாவினைச் சேர்ந்த தனியார் ஆட்டமூர் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் மட்டுமல்லாது கூலிகளாகப் பணி செய்த வாராதி எனும் தமிழர் 2011 ஆண்டிலும், முருகன், சம்பரியன் மணி 2012இலும் ஆந்திர அரசினால் கொலை செய்யப்பட்டனர்.

செம்மரக்கடத்தலில் மரவெட்டிகள், சுமை தூக்குவோர், பளுஏற்றுவர், வாகனம் மூலமாக வெளிக் கொண்டு வருபவர்கள் (transporters), ஏற்றுமதி செய்பவர்கள் எனப் பலர் பங்கு கொள்கின்றனர். இவர்களில் மரவெட்டிகளை மட்டுமே ஆந்திர அதிரடிப்படை குறி வைத்து கொலை செய்கிறது.

ஆந்திராவில் 2000 ஆண்டுக்குப் பின், கடத்தல்காரர்கள் அரசியல் அதிகார மையமாக மாறியதும், அவர்கள் அங்கம் வகித்த கட்சிகள் இந்தத் தொழிலை தீவிரப்படுத்தின. எதிர்க்கட்சியைச் சேர்ந்த கடத்தல்காரர்களை மிரட்ட அப்பாவி மரவெட்டிகளை கொலை செய்கிறார்கள். ஆளும் கட்சியை சேர்ந்த கடத்தல்காரர்கள் தாக்கப்படுவதில்லை. இந்தக் காடுகளில் 144 தடைச் சட்டமும் பல சமயங்களில் சட்டவிரோதமாக கண்டவுடன் துப்பாக்கியால் சுடும் உத்தரவும் இடப்படுகிறது.

கடப்பா, நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் இந்த செம்மரக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தேர்தல் நேரத்தில் நிதி அளிப்பவர்களாக இருக்கிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகளின் சொந்தக்காரர்கள் பங்கெடுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் உதவுகிறார்கள். சித்தூரின் உயர் காவல்துறை அதிகாரியான (சூப்பிரிடெண்டட்) பி.எச்.டி ராமகிருஷ்ணா, கடத்தல்காரர்கள் அரசியல் தொடர்புகளோடு செயல்படுகிறார்கள், இவர்கள் ஒய்.ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் அல்லது தெலுகு தேசம் கட்சியோடும், சமைக்யா ஆந்திரா கட்சியுடனும் இணைந்து செயல்படுவதாக ஜூன் 05, 2014 தேதி பேட்டி அளித்திருக்கிறார் (http://www.deccanchronicle.com/140605/nation-crime/article/smugglers-enjoy-political-links)

மேலும் சித்தூரின் ஆட்சியாளர் பல கடத்தல்காரர்களுக்கு எதிராக ஆணை பிறப்பித்திருக்கிறார். இந்த நபர்கள் கடத்தல்காரர்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களது பெயர் பட்டலவந்தனப்பள்ளியை சேர்ந்த எம்.ரெட்டி நாராயணா, சப்பிடிவந்தலபள்ளியைச் சேர்ந்த ‘சப்பிடி’ மகேஸ் நாயுடு, கடப்பாவின் கோடூர் பகுதியைச் சேர்ந்த ‘கங்கி ரெட்டி’, சித்தூரைச் சேர்ந்த விஜயானந்த ரெட்டி, சித்தூரின் கே.விபள்ளியைச் சேர்ந்த பாஸ்கர் நாயுடு. இவர்களை குற்றத்தடுப்பு சட்டத்தின் படி தடுக்க ஆணையை வெளியிட்டிருந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதில் கெங்கி ரெட்டி என்பவர் இந்தப் பிரச்சனையை அறிந்த பின்னர் துபாய்க்கு தப்பிச் சென்றதும், இவர் “தம்மை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று 2014 மே மாதத்தில் சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச ஆளுநரிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்த கெங்கி ரெட்டியானவர் சந்திரபாபு நாயுடுவின் எதிர்க்கட்சியுடன் நெருக்கமான உறவு வைத்திருப்பவர். மேலும் ரெட்டி நாராயண எனும் கடத்தல்காரன் Zilla Parishad Territorial Constituency எனும் ஜில்லா பரிஷத் பகுதி தேர்தலில் தெலுகு தேசத்தின் சார்பில் போட்டியிட்ட நபர்.

இந்த கெங்கி ரெட்டி சந்திரபாபு நாயுடு மீது 2009இல் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர் என்கிற குற்றச்சாட்டு உண்டு.

மஹேஷ் நாயுடு என்பவர் தெலுகு தேசத்தின் ஆதரவாளர். கெங்கி ரெட்டி கோடுர் சட்டமன்றத் தொகுதியில் ராஜசேகர ரெட்டி கட்சியின் ஆதரவாளர்.

இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள் என்றால் ஆறு மாதம் முதல் ஒருவருடம் வரை சிறையில் இருக்க நேரிடும். மேலும் கடந்த செப்டம்பர் 18, 2014ஆம் தேதியில் ஆந்திராவின் இரண்டு உயர் காவல்துறை அதிகாரிகள் செம்மரக்கடத்தலில் துணை செய்ததும், பங்கெடுத்ததும் பற்றி அறிந்து பதவி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். சி.ஐ.டி பிரிவினைச் சேர்ந்த டி.எச்.பி உதய்குமார், துணை டிவிசனல் காவல்துறை அதிகாரியாக ராஜாம்பேட், கடப்பா பகுதியைச் சேர்ந்த ஜி.வி.ரமண்ணா ஆகியோர் சட்டவிரோத செயலின் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக சந்திரபாபு நாயுடுவின் முதல்வர் அலுவலகம் அறிவித்திருந்தது.

ஆக இவற்றினை கணக்கில் எடுத்துப் பார்க்கும் பொழுது ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் பெருமளவு ஈடுபட்டிருப்பவர்களும், அதன் மூலமாக லாபம் அடைபவர்களுமாக இருப்பவர்கள் அங்கிருக்கும் பெரிய கட்சியினர், பெரும் செல்வந்தர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர். இந்த நிலையில் இங்கு மரம் வெட்டுவதற்காக பணியமர்த்தப்படுகிற தமிழகத்தின் ஏழை எளிய மக்களுக்கு இந்தப் பிரச்சனைகள் குறித்த புரிதலோ, அதற்கான வாய்ப்போ இல்லாத நிலையில் தங்களது வறுமையை நீக்கும் முயற்சியில் வேலை தேடிச் செல்பவர்களை ஆந்திர அரசு பச்சைப் படுகொலை செய்திருக்கிறது. இந்தக் கொலை 27 அப்பாவித் தமிழர்களாக இருப்பதை கவனத்தில் எடுத்துப் பார்க்கும் பொழுது, கடத்தல் தொழிலில் ஈடுபடும் ஆந்திர தேசத்தின் குடிமக்களை கவனமாக தாக்குதலுக்குள்ளாக்காமல் ஆந்திரா காவல்துறை செயல்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு லட்சம் கோடி அளவு மதிப்பிருப்பதாக அறியப்பட்ட செம்மரக்காடுகளில் இருக்கும் மரங்களை அரசாங்கமே எடுத்து ஏற்றுமதி செய்யும் பொழுதில் தமது அரசிற்கு வருமானம் அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் இக்கொலைகளை செய்ய சந்திரபாபு நாயுடு முயன்றிருக்கிறார். மேலும் இதன்மூலம் தனது அரசியல் எதிரிகளாக இருக்கிற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கடத்தல்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சந்திரபாபு நாயுடு கட்சியில் இருக்கும் பிற கடத்தல்காரர்களுக்கு அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார் எனில் செம்மரக்கடத்தலை உண்மையாகவே தடுத்திருக்க முடியும். இதே காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய ஏழை உழைப்பாளிகளை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது ஆந்திர அரசு. இவ்வாறு கிட்டதட்ட 4000 சிறைவாசிகள் பிடித்து வைக்கப்பட்டிருக்கின்றனர். சட்டங்களைப் பற்றி அறியாத இந்த ஏழைப் பழங்குடி மக்களை மீட்டெடுப்பது குறித்து இதுவரை தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கும் பெரிய முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் டிசம்பர் 2013இல் கொலை செய்யப்பட்ட வனத்துறை அதிகாரிகளான டேவிட், சிரிதர் ராவ் ஆகியோர் நேர்மையான அதிகாரிகளாகப் பணியாற்றி மரக்கடத்தலை தடுக்க முயன்றதாலேயே கொலை செய்யப்பட்டார்கள் என்று கூறப்படுவதற்கு இதுவரை விளக்கங்கள் அளிக்கப்படவில்லை. இவ்வாறு பல்வேறு உள் அரசியலை வைத்திருக்கும் ஆந்திர அரசு, தமிழர்கள் மீது நிகழ்த்திய இந்தப் பச்சைப்படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஆந்திர அரசின் பயங்கரவாதத்தன்மையையே காட்டுகிறது.

இவ்வகையில் தமிழக அரசு கடுமையான கண்டனத்தினைத் தெரிவிக்காமலும், சிறையில் வாடும் 4000 தமிழர்களையும் மீட்டெடுக்க முயற்சிக்காமலும் இருப்பது கண்டிக்கத்தக்கது. நீண்டநாட்களாக நிகழ்ந்து வரும் இந்த மனித உரிமைமீறல் தமிழக அரசின் மெத்தனப் போக்கினாலேயே இந்த நிலையை எட்டி உள்ளது. தமிழகத்தில் வணிகம் செய்யும் ஆந்திரப் பெரு வணிக நிறுவனங்களின் சொந்தக்காரர்களாக இருக்கும் ஆந்திராவின் பெரிய கட்சிக்காரர்களின் வணிகத் தளங்களை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். குறிப்பாக சந்திரபாபு நாயுடுவின் சில்லரை வர்த்தக நிறுவனப் பொருட்களாக இருக்கும் ஹெரிடேஜ் உள்ளிட்ட பொருட்களின் மீதான புறக்கணிப்பு போரை தமிழர்கள் நிகழ்த்தி, ஆந்திர அரசின் பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.

List of the dates of killings

1.) 2011 Vaaraadi from Tamil Nadu (Place of Death: Sankariah gari palem, Mittapalem villege, Chandragiri mandal, Chittoor dist)
2. ) Dec, 2012 Murugan from Tamil Nadu (Place of death : Karivepakula kona, Chamala forest, Chittoor district)
3.) 29.1.14 Sambariyan Mani from Tamil Nadu (Place of death: near Kalyani dam, Bobadi hill, Chittoor dist)
4. ) 29.5.14 Venkatesh, 25 years Siva, 28 years Vijayakanth, 25 years Daniyar Attimur Villege, Polur tq, Tiruvannamaalia Dist, Tamil Nadu (Place of Death: Guddeddula banda, 12 kms from Tirumala Venkateswara Temple, Chittoor dist)
5. ) 21.6.14 A. Veeramani, 35 years, Vinayakapuram South, hamlet of Attimala pattu, Vannurpuram post, Arani Tq, Tiruvannamalai District, Tamil Nadu (Place of Death. Forest area in Kadapa District)
6. ) 31.7.14 unidentified red sandal labourer (Place of death. Forest area in Koduru(m), Kadapa Dist.)
7. ) 2.8.14 unidentified red sandal labourer (Place of death. Kadatala hill forest, Bhakarapeta region, Chittoor dist)

– மே 17 இயக்கம்
9444146806 | contact.may17@gmail.com
குறிப்புகள் : Notes:

http://www.gulte.com/news/27274/Life-Threat-to-Chandra-Babu May 24th, 2014, 10:45 AM IST

In his letter to Governor ESL Narsimhan, Babu said, “Despite the information that Sri Kollam Gangi Reddy is threat to me, the police have failed to keep a watch on the accused and allowed him to escape to Dubai. The inefficient and irresponsible police administration in AP has led to the escape of Gangi Reddy who was released on the bail.”Chandra Babu requested Governor to direct DGP to take immediate steps to arrest the culprit and evern urged to issue “red corner” notice if needed. Babu said, “Since the accused had jumped bail, his properties should be confiscated according to criminal procedure code. Necessary disciplinary action should be taken against the officials.” Chandra babu suspected, “I strongly suspected that his escape is not a casual occurence. There appears to be a political scheming behind his escape. Therefore, this entire sequence of events need to be probed in oder to trace the nexus between Sri Kollam Gangi Reddy and persons or parties behind his escape and public are informed about his criminal activities.” Babu asked Governor to take serious steps to avert smuggling activities in the region. He even issued few guidelines to Governor to curb illegal activities

தமிழகத்தை சேர்ந்த 230 செம்மரம் வெட்டும் தொழிலாளர்கள் கைது 02 June 2014

கோடூர் ரயில் நிலையில் பணியிலிருந்த ரேணிகுன்டா சரக காவல்துறை ஆய்வாளர் பி.மது சந்தேகத்துக்குரிய வகையில் நூற்றுக்கணக்கானவர்கள் மும்பை எக்ஸ்பிரஸிலும், காச்சிகுடா சென்னை எக்ஸ்பிரஸிலும் ஏறிச் செல்வதாக உள்ளூர் போலீஸாருக்கும், செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புப்படையினருக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து ரேணிகுன்டா ரயில்நிலையத்துக்கு விரைந்து சென்ற சிறப்புப்படையினர் அங்கு சனிக்கிழமை நள்ளிரவில் வந்தடைந்த மும்பை மற்றும் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில்களை சோதனையிட்டு அதில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 230 செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களை கைது செய்தனர்.

: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-man-held-smuggling-red-sanders-202966.html திமுக பிரமுகர் ஒத்துழைப்பில் கரகாட்டக்காரி மோகனா செம்மரம் கடத்தல் Saturday, June 7, 2014
Two AP cops suspended for involvement in red sanders smuggling – September 18, 2014

There is strong evidence against the two officers-G Uday Kumar, the then OSD, Task Force, (Red Sanders, Tirupati) and G V Ramana, Sub-Divisional Police Officer Rajampet of Kadapa district – of their alleged involvement in illegal activities including red sanders smuggling, according to Chief Minister N Chandrababu Naidu’s office. Uday Kumar is currently serving as the DSP, CID.
http://www.business-standard.com/article/pti-stories/two-ap-cops-suspended-for-involvement-in-red-sanders-smuggling-114091800830_1.html

Andhra Pradesh: Smugglers enjoy political links

DC | U Sudhakar Reddy | June 05, 2014, 08.06 am IST

http://www.deccanchronicle.com/140605/nation-crime/article/smugglers-enjoy-political-links

One of the smugglers, Gangi Reddy, has fled to Dubai sensing trouble from the cops. He has claimed that both the TD and YSRC are involved in red sanders smuggling. Reddy Narayana had contested in the ZPTC election on a TD ticket. Mahesh Naidu is also a TD supporter. Gangi Reddy is a known YSRC supporter in Kodur Assembly constituency.

The sad business of smuggling red sanders wood

“My husband told me he was going to Kerala for work and would come back with a lot of money,” sobs Pavithra. She learnt of his death when she saw his picture in the newspaper. Around 100 metres from Pavithra’s house lives 19-year-old Rekha who too lost her husband, Shiva, leaving her to bring up their 18-month daughter. Both the widows have big debts, and they need to repay around Rs 20,000 every four months, say family members.

http://www.business-standard.com/article/beyond-business/the-sad-business-of-smuggling-red-sanders-wood-114081400763_1.html

andha_encounter

Leave a Reply