6 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் தமிழர் கடலான மெரீனாவில் மே பதினேழு இயக்கம் நடத்தி வந்தது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது அனைத்து மக்களின் அடிப்படை உரிமை. நீர் நிலைகளுக்கு அருகில் அஞ்சலியை செலுத்துவது தமிழர் பண்பாடாக இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த உரிமையினை மறுத்து நினைவேந்தல் நிகழ்விற்கு தடை என்று காவல்துறை அறிவித்தது. 6 ஆண்டுகளாக நடந்ததை தற்போது தடை செய்வதன் பின்னணியில் பாஜக அரசு இருக்கிறது. தமிழகத்தில் பலவீனமாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசினை பயன்படுத்தி இந்த தமிழர் விரோத வெறியாட்ட்த்தில் பாஜக அரசு இறங்கியது. மாலை 3 மணிக்கெல்லாம் கடற்கரை சாலையில் போக்குவரத்தை தடை செய்ய ஆரம்பித்தது காவல்துறை. மெரீனா முழுக்க காவல்துறை குவிக்கப்பட்டு நினைவேந்தலுக்கு வந்த பொதுமக்களை அச்சுறுத்தி வெளியேற்றிக் கொண்டிருந்தது. நான்கு இளைஞர்கள் பேருந்தில் இருந்து இறங்கினால் அவர்களை கடற்கரைக்குள் செல்ல விடாமல் விரட்டியது. கருப்பு சட்டை போட்டு வந்த அனைத்து இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். தனித்தனியாக கூடிய அனைத்து மக்களையும் கைது செய்து பேருந்துகளில் ஏற்ற ஆரம்பித்தது. கடும் நெருக்கடிகளை தாண்டி மே பதினேழு இயக்கத் தோழர்கள் கடற்கரை சாலையில் நினைவேந்தலை தொடங்கிய போது, காவல்துறை சூழ்ந்து கொண்டு அனைவரையும் இழுத்துத் தள்ள ஆரம்பித்தது.
[fbvideo link=”https://www.facebook.com/suyambu.dharmalingham/videos/1109744009169155/” width=”500″ height=”400″ onlyvideo=”1″] மே பதினேழு இயக்கத்தின் தோழர்களை தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியது. அனைத்து தோழர்களையும் இழுத்துச் சென்று வண்டியில் ஏற்றிய போது, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 34 தோழர்களை தனிப் பேருந்தில் ஏற்றி தனி இடத்திற்கு இட்டுச் சென்றது. 200க்கும் மேற்பட்ட மற்ற தோழர்கள் வேறு மண்டபத்தில் வைக்கப்பட்டனர். பின்னர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் டைசன், காஞ்சி மக்கள் மன்ற தோழர் உள்ளிட்ட 17 தோழர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒரு அமைதியான மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் காவித்துறையாக மாறிய தமிழக காவல்துறை வன்முறையையும், தாக்குதலையும் நிகழ்த்தி தோழர்களை கைது செய்துள்ளது. ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வாகன்ங்களுக்கு தீவைத்து வெறியாட்டம் நடத்தியதை நாம் அறிவோம். மீண்டும் தனது கோர முகத்தினை இன்று காட்டியுள்ளது. ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த சட்டமன்றத் தீர்மானத்தினை பொய்யாக்கி இன்று தமிழர் விரோதப் போக்கினை செய்திருக்கிறது பாஜகவின் அடிமையாக செயல்படும் அதிமுக அரசு. பாஜகவின் தமிழின விரோதக் கொள்கையை தனது கொள்கையாக பிரகடனம் செய்து காட்டியிருக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர் வேல்முருகன், காஞ்சி மக்கள் மன்றம், தமிழர் விடியல் கட்சி, இயக்குநர் கவுதமன், ஓவியர் வீரசந்தானம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் விடுதலைக் கழகம், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தோழர் கி.வே.பொன்னையன், தமிழக மக்கள் முன்னணியின் தோழர் அரங்க குணசேகரன் உள்ளிடோரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இத்தனை அடக்குமுறைகளுக்குப் பிறகும், பொதுமக்கள் நினைவேந்தலை குடும்பத்துடன் சேர்ந்து கடற்கைரையில் நிகழ்த்தியிருக்கிறார்கள். தமிழர் கடலில் நினைவேந்துவது தமிழர்களின் உரிமை. இந்த உரிமையை மே பதினேழு இயக்கம் ஒருபோதும் விட்டுத்தராது. தமிழர் கடலில் நினைவேந்தல் நடத்தும் உரிமையினை மே பதினேழு இயக்கம் போராடி மீட்கும். சிங்கள அரசின் முழு ஏஜெண்டாக செயல்படும் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ன் அடியாளாக மாறியிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் இந்த தமிழர் விரோதப் போக்கினை அனைவரும் கண்டிக்க முன்வாருங்கள். பாஜக-ஆர்.எஸ்.எஸ்-அதிமுக கூட்டணிக்கு எதிராக ஜனநாயக ஆற்றல்களை ஒன்றுதிரட்டி தமிழர் விரோத சக்திகளை விரட்டும் வேலையை மே பதினேழு இயக்கம் செய்து முடிக்கும்.