கீழடிக்கு வரும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவிற்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

- in போராட்டங்கள்

கீழடி தமிழர் வரலாற்று அடையாளம். இந்த வரலாற்று அடையாளத்தை அழிக்க முயலும் மோடி அரசினை எதிர்த்தும், தமிழர் வரலாற்றினை மாற்றி எழுதும் வேலையை இந்துத்துவ செய்வதை ஒட்டு மொத்த தமிழகமும் திரண்டு தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இன்று (28-04-2017) மதுரை கீழடிக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடி காட்டும் போராட்டத்திற்கு மே17 இயக்கம் தோழமை அமைப்புகளுடன் மதுரை அண்ணா நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆதிச்சநல்லூரை போன்றே கீழடி அகழ்வாராய்ச்சியை சீரழைக்க முயலுவதற்கு எதிராகவும், சிந்து சமவெளி நாகரித்தின் நீட்சியாக கீழடி திகழுவதற்கான சான்றுகளை அழிக்க முயற்சிப்பதற்கு எதிராகவும், கீழடி தமிழர் நாகரிகத்தை ஆரியப் பார்ப்பனிய நாகரிகமாக சித்தரிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ மோடி அரசிற்கு எதிராகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளர் அமர்நாத் அவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டியும், கீழடியில் எடுக்கப்பட்ட தொல்லியியல் சான்றுகளை பாதுகாக்கும் தொல்லியியல் அருங்காட்சியகம் ஒன்றை மதுரையில் அமைத்திட கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மே பதினேழு இயக்கத்துடன் கீழ்கண்ட அமைப்புகள் பங்கேற்றன.

தோழர் அரங்க குணசேகரன் – தலைவர், தமிழர் மக்கள் முன்னணி,
தோழர் நாகை திருவள்ளுவன் – தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி,
தோழர் டைசன் – ஒருங்கிணைப்பாளர், தமிழர் விடியல் கட்சி,
தோழர் திலீபன் செந்தில் – திராவிடர் விடுதலைக் கழகம்,
தோழர் தமிழ்ப்பித்தன் – தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்,
தோழர் கணேசன் – தமிழர் தேசிய முன்னணி,
தோழர் பழ பரிதி – தமிழ் தமிழர் இயக்கம்,
தோழர் செல்வம் – அலைகுடி மக்கள் இயக்கம்,
தோழர் அழகர் சாமி – பெரியார் பெருந்தொண்டர்

தோழர் திருமுருகன் காந்தி ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் காணொளி.
[fbvideo link=”https://www.facebook.com/mayseventeenmovement/videos/1680985215252264/” width=”500″ height=”400″ onlyvideo=”1″]

கீழடியில் மக்கள் விடுதலை கட்சியை சார்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க குண்டர்களை ஏன் காவல்துறை கைது செய்யவில்லை??.

சட்டம், இந்துத்துவ பாசிஸ்டுகளுக்காக வளைகிறது. பாஜக குண்டர்கள் நடத்திய இந்த் வன்முறை வெறியாட்டத்தை மற்றவர்கள் செய்திருக்கும் பட்சத்தில் அவர்களை தாக்கி கைது செய்திருக்கும் காவல்துறை., தமிழக காவல்துறை பாஜக இந்துத்துவ கும்பல்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதை இந்நிகழ்ச்சி அம்பலப்படுத்துகிறது.

பாஜக குண்டர்களை கைது செய்ய அனைவரும் வலியுறுத்த வேண்டும்.

கீழடியில் போராட்டம் நடத்திய மக்கள் விடுதலை கட்சியை சார்ந்த தோழர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வாழ்த்துகள்.

Leave a Reply