இந்தியாவே WTO ஒப்பந்தத்திலிருந்து வெளியேறு!

இந்திய மோடி அரசே, ஏழை எளிய மக்களின் சோற்றில் மண்ணைப் போடாதே!
என்ற கோரிக்கைகளோடு ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர். நகர் சந்தை பகுதியில் 01-05-2017 அன்று நடைபெற்றது. தோழர் மணிமாறன் தலைமையிலான புத்தர் கலைக்குழுவின் பறையிசை முழங்க துவங்கிய இக்கூட்டத்தை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் லேனாகுமார் வரவேற்புரை ஆற்றி தொகுத்து வழங்கினார்.

விவசாய பின்புலத்திலிருந்து வந்த தோழர் பன்னீர் செல்வம் விவசாயிகளின் நிலை குறித்து சுருக்கமாக உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து தோழர் சா. காந்தி எழுதி நிமிர் வெளியீடாக வந்துள்ள மே பதினேழு இயக்கத்தின் “மூடப்படும் ரேசன் கடைகள்” நூல் அறிமுகம் நடைபெற்றது. தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கரு, அண்ணாமலை வெளியிட தோழர் குமரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன் இந்திய மோடி அரசு உழைக்கும் மக்களுக்கு எதிராக கொண்டுவரும் திட்டங்களை சொல்லி உரையாற்றினார்.
[fbvideo link=”https://www.facebook.com/mayseventeenmovement/videos/1682681045082681/” width=”500″ height=”400″ onlyvideo=”1″] அதன் பின்னர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள் முருகன் இந்திய அரசு WTO ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அரசியல் குறித்து உரையாற்றினார். இறுதியாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி WTO ஒப்பந்தத்தை சுற்றி சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் நடைபெறும் அரசியலை விரிவாக விளக்கினார். தோழர் லேனாகுமார் நன்றியுரையாற்றினார்.

Leave a Reply