விவசாய பிரச்சனையும் மத்திய பிஜேபி அரசின் துரோகமும்:

சூப்ரீம் கோர்டிலிருந்து இந்த காவி பிஜேபிகாரங்க வரைக்கும் விவசாயி கடன் தள்ளுபடிய மாநில அரசு தான் செய்யனும் அதுனால டெல்லியில போராடுறது அவசியமில்லைன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டு இருக்காங்க..

ஒரு மாசமா டெல்லியில போராடுகிற விவசாயிகளின் முதன்மை கோரிக்கை என்பது கோர்ட் சொல்லியும் இன்னும் மத்திய அரசு அமைக்காமல் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கனுங்கிறதுதான்.

ஒரு வேளை அமைச்சிருந்தா காவிரியில தண்ணி வந்திருக்கும் அவுங்க விவசாயத்த ஒழுங்கா பார்த்திருப்பாங்க விவசாய கடனையும் ஒழுங்கா கட்டியிருப்பாங்க. ஆனா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காம காவிரியில தண்ணி வராம ஆக்கிட்டு அவங்க ஏன் கடனை தள்ளுபடி பண்னனுமுன்னு போராடுங்கன்னு கேட்கிறதெல்லாம் அயோக்கியத்தனம். விவசாய கடனை தள்ளுபடி பண்ணுன்னு கேட்கிறது தப்புன்னா என்ன காரணத்திற்கு உத்திரபிரதேச பாஜக-ஆர்.எஸ்.எஸ். முதல்வர் 30ஆயிரம் கோடிக்கு மேலான விவசாய கடனை தள்ளுபடி செய்தார். அவர்களுக்கு அவ்வளவு பணத்தை மத்திய அரசு கொடுத்தது.

ஆனால் தமிழகத்திற்கு கடந்த பிப்ரவரி 27’2017 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடியை சந்தித்து தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக Rs 39,565 கோடியும் வர்தா புயல் பாதிப்பு நிவாரணமாக Rs 22,573 கோடியும், மீனவர் நலனுக்காக Rs 1,650 கோடியுமாக மொத்தம் 63,788கோடி கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு கொடுத்தது என்னமோ 3637.64கோடி மட்டுந்தான். அதாவது கேட்டதிலிருந்து 17%மட்டுமே நிவாரண்மாக கொடுத்தது. ஆனால் தமிழகத்திலிருந்து 2லட்சம் கோடி அளவுக்கு வரியின் மூலம் வாங்கிக் கொள்கிறது மத்திய அரசு.

இப்படியாக காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காமலும் உரிய நிவாரணம் கொடுக்காமலும் தமிழக விவசாயிகள் சுமார் 270பேரை சாகடித்துவிட்டு இப்போது வந்து விவசாய கடனை தள்ளுபடி பண்ணி கேட்பவர்களை அசிங்கமாக பேசுவதும், கண்ட கண்ட நபர்களையெல்லாம் சந்திக்கும் பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை சந்திக்காமல் அலட்சியம் செய்வதுமாக பச்சை துரோகத்தை செய்து வருகிறது.

மத்திய அரசின் இந்த துரோகத்தை கண்டித்து வரும் வெள்ளிகிழமை மே 17 இயக்கத்தின் சார்பாக சென்னை நுங்கப்பாக்கத்திலுள்ள மத்திய அரசின் வருமனா வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுகிறோம்.

விவசாயிகளின் நலனில் அக்கறையுள்ள அனைவரும் கலந்துகொண்டு மத்திய அரசின் துரோகத்தை அம்பலப்படுத்துவோம். தமிழக விவசாயிகளை காப்போம்.

Leave a Reply