பசுக்களுக்காக மனிதர்களை கொலை செய்யும் காவிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராஜஸ்தானில் மாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்ற பால்வியாபாரியை பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அடித்துக் கொலை செய்த மதவாத பயங்கரவாத அமைப்புகளைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 17-4-2017 அன்று தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தியா முழுதும் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை அடித்துக் கொலை செய்யும் மதவாத பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தோழர் ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் அப்துல் சமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக தோழர் திருமுருகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆர்பபாட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

Leave a Reply