இந்தியாவின் தொடரும் துரோகம்

தமிழர்களை இனப்படுகொலை செய்த இனப்படுகொலை இலங்கையுடன் எந்தவித உறவையும் இந்தியா வைத்துக் கொள்ளக்கூடாதென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இயங்குகிற தமிழ்நாடு அரசு ஒருமித்த தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிற சூழலில் அதை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு உதவி செய்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாக இப்போது இலங்கைக்கு 78 டீசல் என்ஜீன் மல்டி பிளக்ஸ் மாடல் கொண்ட தொடர்வண்டியும் மற்றும் 160 கோச்களை தயாரிக்கும் ஓப்பந்தமானது கடந்த மாதம் இந்தியா இலங்கைக்கு இடையில் கையெழுத்தாகி இருக்கிறது. இது தயாரிக்கப்படும் இடம் வேறெங்குமில்லை எந்த இலங்கைக்கு எந்தவித உதவியும் செய்யக்கூடாதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோ அந்த தமிழ்நாட்டில் அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னை ஆவடியிலுள்ள ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை (I.C.F)ல் தான் தாயாரித்து அனுப்பப்படுகிறது. அதுவும் 58மில்லியன் ரூபாய் வெறும் 1.75% வட்டியில்.

தமிழக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுக்கச்சொன்னால் கொடுக்க மறுக்கும் இந்திய அரசு தமிழர்களை கொலைசெய்த கொலைகாரர்களுக்கு தமிழர்களின் வரி பணத்திலிருந்தே பணத்தை அள்ளி இறைக்கிறது.

ஏன் தொடர்ச்சியாக இனப்படுகொலை இலங்கைக்கு இந்தியா உதவவேண்டும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். ஏனென்றால் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ததில் இந்திய அரசும் கூட்டுக்குற்றவாளி. இதனை தான் 2008 போர் ஆரம்பித்த தருணத்திலிருந்து தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இதனை தான் இரண்டு நாட்களுக்கு முன் இலங்கையின் முன்னாள் அதிபரும் இனப்படுகொலையாளனுமான இராசபக்சே பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தான்.

//அதாவது இந்தியாவின் போரைதான் நான் நடத்தினேன். இதற்கு இந்தியா பலவழிகளில் எங்களுக்கு உதவி செய்தது. அதனை வெளியில் சொல்லமுடியாது //But they helped us! We didn’t have to ask! Because I was fighting your war, India’s war, not my war, it was not only my war, it was an Indian war, it was a humanitarian war. India helped us in every possible way. We didn’t want to publicise it, tell the press too much.//

இந்தியாவின் இந்த துரோகத்தை எப்படி தடுப்பது:

இனப்படுகொலையில் கூட்டுகுற்றவாளியான இந்தியாவை சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கைக்கு பக்கத்தில் நிறகவைக்கும் வேலையை உலகமெங்கு பரவி வாழும் தமிழர்கள் செய்யும்போது மட்டுமே இந்தியாவின் தொடரும் இதுபோன்ற துரோகத்திலிருந்து தமிழனத்தை காக்க முடியும்.

Leave a Reply