கடனை வாங்குகிறோமென்று விவசாயியை தாக்கிய காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விவசாயிகளிடம் கடன் வசூல் என்ற பெயரில் காவல்துறை உதவியோடு தாக்குதல் நடத்தி, தற்கொலைக்கு தூண்டுவதை தடுத்திட மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நேற்று (22-3-2016) சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் லேனா குமார் , பிரவீன்குமார் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply