உலக தமிழ் பாரம்பரிய காலடி குத்துவரிசை விளையாட்டு சங்கத்தின் 10ஆவது ஆண்டுவிழா

- in பரப்புரை

உலக தமிழ் பாரம்பரிய காலடி குத்துவரிசை விளையாட்டு சங்கத்தின் 10ஆவது ஆண்டுவிழா நேற்று 06.03.16 ஞாயிற்று கிழமை மாலை 5மணிக்கு கே.கே.நகர் சிவன் பார்க் அருகில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார்.

தமிழர்களின் பாரம்பரிய விளைட்டான காலடி குத்துவரிசை, சிலம்பம் முதலான கலையை அடுத்து தலைமுறைக்கு கொண்டுசேர்க்கும் பணியை உலக தமிழ் பாரம்பரிய விளையாட்டுச் சங்கம் தொடர்ந்து செய்துவருகிறது. இந்த சங்கத்தின் 10வது ஆண்டுவிழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பார்வையாளர்களுக்கு தமிழனின் பராம்பரிய விளையாட்டான காலடி குத்துவரிசை சிலம்பம் போன்ற கலையை வீரர்கள் செய்து காட்டினர்.

Leave a Reply