சல்லிக்கட்டு தடையை கண்டித்து சாஸ்த்திரி பவன் முற்றுகை.

சல்லிக்கட்டின் மீதான தடையை கண்டித்து இன்று 13-1-2016 மாலை 4 மணிக்கு இந்திய அரசின் சாஸ்த்திரி பவன் அலுவலகம் மே பதினேழு இயக்க தோழர்களால் முற்றுகையிடப்பட்டது.
பன்னாட்டு கார்ப்பரேட் வணிகத்திற்காக நாட்டு மாடுகளை அழிக்கவும், தற்சார்பு விவசாயத்தை அழிக்கவும், தமிழ் தேசிய இன மக்களின் பண்பாட்டின் மீது அடக்குமுறையாக கொண்டுவரப்பட்ட இந்த தடையை கண்டிக்கும் விதமாக பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. போராடிய தோழர்களை காவல்துறை கைது செய்தது.

Leave a Reply