முனைவர் நொபுரு கராசிமா நினைவுக் கருத்தரங்கம்

வரலாற்றாய்வாளர் தமிழறிஞர் மறைந்த முனைவர் நொபுரு கராசிமா அவர்கள் நினைவுக் கருத்தரங்கம் மற்றும் படத்திறப்பு நிகழ்வு நேற்று 23-1-2016 மாலை 5 மணிக்கு சிறப்பாக நடந்தது. ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் ஓவியர் புருஷத்தமன் அவர்களால் வரையப்பட்ட முனைவர் நொபுரு கராசிமா அவர்களின் உருவப்படம் திறந்துவைக்கப்பட்டு, குத்துவிளக்கேற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மகிழினி மணிமாறன் பறையிசையுடன் முனைவர் நொபுரு கராசிமா பற்றிய பாடலை பாடினார்.
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் லேனா குமார் தொடக்க உரையாற்றினார்.
முனைவர் சு ராஜகோபால் – மேனாள் பதிவு அலுவலர், தொல்லியல் துறை
முனைவர் சொ. சாந்தலிங்கம் – செயலாளர் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை
பேராசிரியர் வீ செல்வக்குமார் – கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை, தமிழ் பல்கலைகழகம், தஞ்சாவூர்
பேராசிரியர் சுந்தர் காளி – காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம், காந்திகிராமம்
திரு பிகொவா – ஜுனிச்சி ஜப்பானிய தூதரகம்
ஆகியோர் நொபுரு கராசிமா அவர்களுடனான அனுபவம், அவரின் வரலாற்று ஆய்வு முறைகள், அவரின் ஆய்வுகளின் முக்கியத்துவம் போன்றவை குறித்து விளக்க உரையாற்றினார்கள். முனைவர் சு ராஜகோபால் முனைவர் நொபுரு கராசிமா அவர்களோடு எடுத்துக்கொண்ட படங்கள், அவரின் கல்வெட்டு ஆய்வு, அவர் எழுதிய புத்தகங்கள், அவர் ஆய்வுக்கு பயன்படுத்திய ஏடுகள், அவரால் அனுப்பப்பட்ட கடிதங்கள் வாழ்த்துக்கள், ஜப்பானில் நடந்த அவரின் இறுதி நிகழ்வு குறித்த செய்திகளை ஒளித்திரையில் அனைவருக்கும் தெரியுமாறு காட்சிப்படுத்தினார். உரை நிகழ்த்திய அறிஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டது. நிறைவாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் முனைவர் நொபுரு கராசிமா அவர்களின் ஆய்வின் அரசியல் ஆகியவற்றை விளக்கி, உரையாற்றிய தோழர்களுக்கு நன்றி தெரிவித்து நிறைவுரையாற்றினார்.
இந்நிகழ்வை நிமிர் ஒருங்கினைத்தது.

Related Posts

Leave a Reply