கெயில் குழாய் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும் – கருத்தரங்கம்.

நேற்று 20-2-2016 மாலை 5 மணிக்கு சென்னை தி நகரில் – கெயில் குழாய் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்க தோழர் பிரவின், தோழர் அருண் தங்கராஜ், தமிழக விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்க தோழர் ஈசன், தோழர் சா.காந்தி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் கி.வெ.பொன்னையன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தோழர் வெற்றிச்செல்வன், தோழர் சுந்தர்ராஜன் மற்றும் கெயில் குழாய் பதிப்பால் பாதிக்கப்பட்ட தோழர் பொன்னம்மாள் தோழர் வசந்தாமணி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்நிகழ்வை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் தொகுத்து வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் உணர்வாளர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கத்தின் மையமாக கெயில் குழாய் பதிப்பால் நேரடியாக பாதிக்கப்பட்டு தங்களின் நிலத்தை காக்க அந்த மண்ணிலிருந்து போராடும் தோழர்கள் பொன்னம்மாள் மற்றும் வசந்தாமணி அவர்களின் போர்க்குரல் அமைந்தது. இந்த கருத்தரங்கத்தை தற்சார்பு விவசாயிகள் இயக்கம் மற்றும் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது .

Leave a Reply