பத்திரிக்கையாளர் மேத்யூ லீயை வெளியேற்றிய ஐநாவை கண்டித்து கண்டன கூட்டம்

அமெரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் மேல் எந்த கறையும் படிந்து விடாதபடி அப்படியே படிந்தாலும் அதனை துடைக்கும் துடைப்பானாக இருக்க உருவாக்கப்பட்ட அமைப்பான ஐநாவின் ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த இன்னர் சிட்டி பிரஸ் என்ற பத்திரிக்கையையும் அதன் ஆசிரியரான மேத்யு லீ என்பவரையும் விரட்டி அடித்திருக்கிற ஐநாவை கண்டித்து கண்டன கூட்டம்.
—————————————————————————————————————————————–

இரண்டாம் உலகபோருக்கு பின் இனி உலகில் போரே கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஐநா. ஆனால் அதன் கண் முன்னாலேயே எண்ணெய் வளங்களுக்காக அல்லது தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த எத்தனை மனித உயிர்களை நரவேட்டை ஆடிவருகிறது இந்த வளர்ந்த நாடுகள். இதனைதான் நாம் ஈராக்கிலே, ஈழத்திலே சிரியாவிலே ஆப்கானீஸ்தானிலே இந்தோனேசியாவிலே இன்னும் பல நாடுகளில் பார்க்கிறோம்.

ஆனால் இதை தடுக்க வேண்டிய ஐநா அமைப்பு வேடிக்கை பார்ப்பதுடன் போரை நடத்தும் நாடுகளை காப்பாற்றும் வேலையை முன்னின்று செய்கிறது என்பது தான் இந்த நூற்றாண்டின் சோகம். இப்படி ஐநா அவை செய்த துரோகத்தால் தான் நாம் ஒன்றைரை லட்சம் தமிழர்களை 2009ல் ஈழத்திலே இழந்தோம்.

எங்களை இந்த இனவெறி அரசிடம் விட்டுவிட்டு போய் வீடாதீர்களென்று தமிழர்கள் கெஞ்சியும் அம்போவென விட்டுவிட்டு போனது ஐநா.

போரில் கொல்லப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை திரட்டவேண்டிய ஐநா அதிகாரி பிணங்களை எண்ணுவது என் வேலையில்லையென்று தவிர்த்த கொடுமையை எங்கேபோய் சொல்வது

போரை தடுக்க அனுப்பப்பட்ட ஐநாவுக்கான இந்திய அதிகாரி இலங்கை கொடுத்த சொகுசு ஓட்டலிலிருந்து வெளியிலேயே வராமல் தமிழர்களை கொல்ல இலங்கை உதவியதை யாரிடம் சொல்ல..

போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லுங்கள் போதுமென்று சொன்னவரும் ஐநா அதிகாரிதான்.

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பதிலாக கிரிக்கெட் மட்டையை அனுப்பி அங்குவந்த மக்களின் மீது இலங்கை குண்டுபோட்டு கொல்ல உதவியதும் ஐநா தான்.

போருக்கு பின் இனப்படுகொலை செய்த இலங்கை இராணுவ அதிகாரியை எந்தவித விசாரணையும் இல்லாமல் இலங்கைகான ஐநா அதிகாரியாக ஏற்றுக்கொண்டதும் ஐநாதான்.

அதே அதிகாரியோடு ஒரே அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்து பணம் வாங்கிக்கொண்டு போரில் விடுதலை புலிகளை மட்டும் குற்றச்சொன்னவரும் ஐநாஅதிகாரிதான்.

இப்படி ஐநா செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனை இந்த வெளியுலகத்திற்கு எடுத்துச்சொல்லிய மிகமுக்கியமான பணியினை செய்தது ஐநாவிலிருந்த இன்னர் சிட்டி பிரஸ் என்ற பத்திரிக்கையும் அதன் ஆசிரியருமான மேத்யு லீ என்பவர் தான். எனவே ஐநா இன்று அந்த பத்திர்க்கையையும் மேத்யு லீயையும் ஐநா அலுவலகத்திலிருந்து மிகமோசமான முறையில் அவரின் மேல் ஆடையை (கோட்) கழற்றி அநாகரிகமான் முறையில்நடந்து வெளியே அனுப்பியிருக்கிறது.

பத்திரிக்கை சுதந்திரத்தை பற்றி எல்லா நாடுகளுக்கும் வகுப்பு எடுக்கும் ஐநாவே அதனை மதிக்காமல் இருந்து கொண்டு அதை மற்ற நாடுகளுக்கு வகுப்பு எடுப்பது கேலிக்கூத்தானது. எனவே தான் ஐநாவின் இந்த செயலை கண்டித்து மே பதினேழு இயக்கம் வரும் சனிகிழமை மாலை 5மணிக்கு சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் பல்வேறு ஊடகவியாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் கண்டன கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

மனித உரிமை மீதும் பத்திரிக்கை சுத்ந்திரத்தில் நம்பிக்கை கொண்டோரும், தமிழனப்படுகொலையில் ஐநாவின் துரோகத்தை அம்ப்பலப்படுத்திய மேத்யூ லீக்கு ஆதரவளிக்க அனைவரும் வருக..

12795478_1248139201867697_3400148418075741553_n

 

Leave a Reply