தொடரும் இந்திய அரசின் துரோகம்

இனப்படுகொலை இலங்கைக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறது அப்போதெல்லாம் தனது ஆரிய இனத்தவனான இலங்கையை காப்பதில் மும்முரமாக இந்தியா களமிருக்கும். அதையேதான் இப்போதும் இந்தியா செய்யவிருக்கிறது. அதனைஅம்பலப்படுத்தும் விதமாகத்தான் மே 17 இயக்கத்தின் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

2009ல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை இனப்படுகொலை செய்ய தனது ஆரிய நண்பனான இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்த இந்தியா. அந்த இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்ற அமெரிக்காவோடு சேர்ந்து வருடந்தோறும் வெற்று தீர்மானங்களை ஐநா அவையில் முன்வைத்தது.

மேலும் இதே காலகட்டத்தில் இலங்கையை பொருளாதாரத்தில் உயர்த்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த முழு முயற்சி எடுத்தது இந்தியா அதில் வெற்றியும் பெற்றது. ஏனென்றால் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைமையில் இருந்தது இந்தியரான கமலேஷ் சர்மா இவர் தான் வெறொரு நாட்டில் நடைபெறவிருந்த காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்கு மாற்றியமைத்தார். இந்த மாநாட்டின் மூலம் இலங்கைக்கு பெருமளவு மூதலீடுகள் குவிந்தது.

அதன் பின் இலங்கையின் இனப்படுகொலையாளி இராசபக்சேவின் சீனா பாசத்தால் முரண்பாடு எற்பட அந்த இடத்திற்கு அமெரிக்காவின் துனையோடு மைத்திரிபால சிறிசேனா என்ற பொம்மையை அமர்த்தியது. அதனை தமிழர்களுக்கு தீர்வு தரும் புதிய அரசு அமைந்துவிட்டதென்று போலி பிரச்சாரத்தை இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து மேற்கொண்டு 2015ல் செப்டம்பரில் நடந்த ஐநா கூட்டத்தொடரில் இனப்படுகொலை இலங்கையை முழுவதுமாக காப்பாற்றியது.

இப்போது ஆபத்தபாண்டவ அரசான மைத்திரியின் அரசில் தொடர்ந்து இனப்படுகொலைக்கான வேலைகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பல்வேறு ஆய்வுகள் குறிப்பாக மனித உரிமை செயற்பாட்டாளர் யாஸ்மின் சூகாவின் அறிக்கை 2015 க்கு பின்னும் அங்கு கொடூரமான துன்புறுத்தலைகளை தமிழர்கள் சந்திக்கிறார்கள் எதுவும் மாறவில்லையென்று உண்மையை வெளிச்சம் போட்டு காண்பித்தது. இதுகுறித்து இலங்கையும் அதன் கூட்டாளிகளான இந்தியாவும், அமெரிக்காவும் பேசாமல் கள்ளமவுனம் காத்தார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் இலங்கையின் கொடூரத்தை நிரூப்பிக்கும் வண்ணம் மேலும் இரு சம்பவங்கள் அண்மையில் திரிகோணமலை மாவட்டத்தில் நடைபெற்றிருக்கிறது. அது ஆறு வயது தர்ஷன் என்ற சிறுவனும் கொடுரமாக பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு ஷீ இருக்கு கயிறால் கழுத்து இறுக்கப்பட்டு கல்லைகட்டி சம்பூர் இராணுவ முகாமிருக்கும் கிணற்றில் வீசப்பட்டுள்ளான். இதே போலவே சிறுமி ஒருவளும் சடலத்தோடு மீட்கப்பட்டுள்ளால்.

இப்படி இந்தியாவும் அமெரிகாவும் கட்டியமைத்த மைத்திரி இரணில் சந்திரிகாவின் முற்போக்கு முகமூடி வெகுவிரைவில் அம்பலப்பட்டு போனதை தடுக்க அதன் கூட்டாளிகளில் ஒன்றான இந்தியா தனது வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நாளை 05.02.16 அன்று இலங்கைக்கு அனுப்புகிறது.http://www.dailymirror.lk/…/Sushma-Swaraj-to-visit-SL-on-Fr…

கொடூரமான கொலைகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் சுஷ்மா இலங்கையோடு வர்த்தக ஓப்பந்தம் பற்றி பேச நாளை போகீறார். இதன் மூலம் இலங்கையின் அனைத்து கொடூரங்களையும் சர்வதேசத்தின் முன் மறைக்க போகிறது இந்தியா. இந்த வேலையை உலகெங்கும் கொண்டுசெல்லும் வேலையை ’சிங்கள ரத்னா ஹிந்து’ செய்கிறது.

இதனை எதிர்த்து தான் நாளை மாலை 5மணிக்கு சிறுவன் தர்ஷ்ன் கொலைக்கு நியாயம் கேட்டும், தொடர்ந்து இனப்படுகொலையில் பங்காற்றி வரும் இந்திய அரசின் அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டுமெனவும், இலங்கையோடு இராணுவ ஓப்பந்தம் போட முயற்ச்சிக்கும் மோடி அரசை கண்டித்தும் கண்டண ஆர்ப்பாட்டத்தை மே 17 இயக்கம் நடத்துகிறது.

தொடர்ந்து தமிழர் விரோத போக்கோடு செயலபடும் இந்திய அரசு கடலுக்கு அந்த பக்கம் இருக்கும் தமிழனையும் இலங்கையோடு சேர்ந்து வஞ்சிக்கிறது.கடலுக்கு இந்த பக்கம் தமிழனையும் கெய்ல் பைப் லைன் கூடங்குளம் அண் உலைகள், பாரம்பரியமான ஜல்லிகட்டுக்கு தடை என்று அழிக்கிறது. எனவே இந்திய அரசின் துரோகத்திற்கு முற்றுபுள்ளி வைக்க திரள்வோம் தமிழர்களே…

Leave a Reply