வி.கே.சிங்கை வன்மையாக கண்டிக்கிறோம்

- in பரப்புரை

சாதி வெறியர்களால் ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை, நாய்கள் மீது கல்லெறிவதுடன் ஒப்பிட்டு பார்ப்பனிய திமிருடன் பேசிய பாஜக-வின் மத்திய அமைச்சரும், தமிழீழ இனப்படுகொலையின் கூட்டாளியுமான வி.கே சிங்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தொடர்ந்து சாதிய மற்றும் மத ரீதியான வன்முறைகளை தூண்டி வரும் இந்துத்துவ சக்திகளை அம்பலப்படுத்துவோம்.

பச்சிளம் குழந்தைகளை கொலை செய்யுமளவிற்கு ஒருவரை காட்டிமிராண்டித்தனமாக மாற்றுகின்ற ’சாதி’ ஒழிக்கப்படவேண்டிய ஒரு மனநோய், அது ஒரு சமூக நோய். விலங்குகள் கூட, தான் வேட்டையாடும் பிராணிகளின் குட்டிகளை பாதுகாப்பதை காணமுடிகிறது. அந்த அன்பைக் கூட மனிதனிடமிருந்து நீக்கி விலங்குகளைவிட கொடியவர்களாக மாற்றும் வலிமை சாதிக்கு உண்டெனில் , சாதி ஒழிக்கப்படவேண்டியது என்பதில் எப்படி மாற்றுக் கருத்து இருக்க முடியும்.

இந்துத்துவ அரசின் சாதிவெறி ஆட்சிமுறையும், இந்துத்துவத்தினை அரசநிர்வாகமாக மாற்றி இருக்கும் இந்தியக் கட்டமைப்பும் ஒரு பொழுதும் சாதியை விட்டுக்கொடுக்காது, சாதி ஒழிப்பினை முன்னெடுக்காது, சாதி ஒழிந்தால் இந்தியா ஒழியும் என்பதை புரிந்து வைத்திருக்கும் ஆளும் வர்க்கம் சாதியை கடைசிவரை காக்கும். சாதி இல்லாமல் இச்சமூகக் கட்டமைப்பின் சுரண்டல் உயிர்வாழாது. சாதி ஒழிக்காமல் மனித நேயம் இந்தியாவில் சாத்தியம் இல்லை.V.K.Singh

Leave a Reply