மின்கட்டண உயர்வு மின்னுற்பத்தி தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை தடுக்க கோரியும், அரசே மின்சாரம் தயாரிக்க முடிந்தும் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைக் கண்டித்தும், மக்களின் கருத்துக்களை மதியாமல் தனியாருக்கு சாதமாக செயல்படும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை கலைக்க கோரியும் வள்ளுவர் கோட்டத்தில் மே17 இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
இந்த ஆர்ப்பாட்த்தில் தந்தைபெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர் கொற்றவ மூர்த்தி, தோழர் வழக்கறிஞர் அங்கையற்கண்ணி, தமிழக விவசாயிகள் சங்கம் தோழர் புருசோத்தமன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் அய்யம்பதிராசா, பாலச்சந்திரன் மாணவர் இயக்கத் தோழர் நந்தகுமார், மே17 இயக்கத் தோழர்கள் சபரி,கொண்டல், அருள்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஏராளமான தோழர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.Leave a Reply