அமெரிக்க தூதரகம் முற்றுகை

2011இல் ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்ட பொழுதில் மே17 இயக்கம் இது சமரசத்திற்கு வழி செய்யும் சதியை உள்ளடக்கமாக வைத்திருக்கிறது என்று பதிவு செய்தது. மே மாதம் மூன்றாம் வாரம், 2011இல் கருத்தரங்கின் மூலம் ஐ.நாவின் மூலமாக மேற்குலகம் முன்வைக்கும் சதிகளை விவரித்தோம். இதன் காரணமாக போர்க்குற்றம், போன்ற வார்த்தைகளை ஏற்க மறுப்பதும், இனப்படுகொலைக்கான தீர்வு தேவை என்றும், அத்தீர்வு பொதுவாக்கெடுப்பு என்றும் முன்வைத்தோம்.

அதன் பிறகு 2012இல் அமெரிக்கா இலங்கை அரசு செய்த உள்நாட்டு விசாரணையான LLRC அறிக்கையை முன்வைத்து தீர்மானம் கொண்டு வந்த பொழுதிலும் மே17 இயக்கம் 18,மார்ச்2012,இல் சென்னை மெரினாவில் மக்களை திரட்டி பொதுவாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை என்றும் அமெரிக்க தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என்றும் பதிவு செய்தோம். இலங்கையின் அரசியல் சாசனத்தையும், LLRC அறிக்கையையும் எரித்தோம்.

இதை 2012 மேமாதம் நினைவேந்தலில் இக்கோரிக்கையை வலியுறுத்தி ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களைக் கொண்டு அழுத்தமாக ஊடகத்தில் பதிவு செய்தது மே17 இயக்கம்.

2013 அமெரிக்க தீர்மானம் கொண்டு வரும் முன்னர் ஐ.நா அலுவலகத்தினை முற்றுகை இட்டு தீர்மானத்தினை வலிமையானதாகவும், சர்வதேச விசாரணை கோருகின்ற வழிமுறையை முன்வைக்க வேண்டுமென்று பதிவு செய்தோம். இதை செய்ய மறுக்கும் ஐ.நாவின் கொடி எரிக்கப்பட்டது

2013 இல் அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்க வேண்டுமென்கிற காரணங்களை மாணவர் தலைவர்களிடம் புரியவைத்து அக்கோரிக்கையை முன்னகர்த்தினோம். அமெரிக்க தீர்மானம் மூலமாக அனைத்து தீர்வும் கிடைக்கும் என்று விவாதங்களை எதிர்கொண்டு அதன் பொய்மைத் தன்மையை அம்பலப்படுத்தினோம். 2013 மார்ச் மாதம் 19ஆம் தேதி சென்னை மெரினாவில் மக்களை திரட்டி அமெரிக்கத் தீர்மானத்தை எரித்தோம். மாணவர்களால் அமெரிக்க தீர்மானம் பல இடங்களில் எரிக்கப்பட்டது.

2014இல் அமெரிக்காவின் தூதரகத்தினையும், ஐநாவின் அலுவலகத்தினையும் முற்றுகை இட்டு அமெரிக்க தீர்மானம் தமிழர்களுடைய இறைமையும், இனப்படுகொலைக்கான நீதியையும் மறுக்கிறது என்று பதிவு செய்தோம். அமெரிக்க தீர்மானம் எரிக்கப்பட்டது. ஐ.நாவின் கொடியும் எரியூட்டப்பட்டது.

2015இல் ஐ.நாவின் அலுவலகம் இத்தீர்மானத்தின் மூலமாக இலங்கையை காக்கிறது என்றும், இத்தீர்மானம் தமிழர்களை மேலும் பின்னடையச் செய்கிறது என்றும் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அமெரிக்க தூதரகத்தினை முற்றுகை இட்டு அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது.

2015 ஜனவரியில் அமெரிக்காவின் அதிகாரி ஐ.நாவிற்கு மாற்றப்பட்டு அவர்கள் மூலமாக இலங்கை அரசே விசாரணை நடத்தும் வகையில் நடவெடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்தினோம்.

இந்த தமிழீழ எதிர்ப்பு கொள்கை அரங்கு (anti-eelam coalition platform ) என்பது அமெரிக்காவின் தலைமையிலான கூட்டணி நாடுகளாக அமெரிக்கா-இங்கிலாந்து-இந்தியா-இலங்கை எனும் கூட்டமைப்பு (cooperation ) தங்களுடைய சுயநலம் மற்றும் தம்முடைய ராணுவ-பொருளாதார பொது நலன்களை குறித்து உருவாக்கி வளப்படுத்தி இருக்கும் புதிய இந்தியப் பெருங்கடல் கூட்டு செயல்திட்டத்தின் (co-optive aaction plan) நடவெடிக்கைகளை கொள்கை ரீதியாகவும் (ideological orientation towards regional hegemonic interests of India and Imperialist interest designs of west ) பல கருத்தரங்குகளை தமிழகம் முழுவதும் நிகழ்த்தியது மே17 இயக்கம்.

2011இல்; இருந்து தொடர்ந்து மே17 இயக்கம் அம்பலப்படுத்தி வரும் அமெரிக்க சார்பு இந்திய பெருங்கடல் கொள்கையும், அதன் தமிழீழ எதிர்ப்பு நடவெடிக்கையும் தற்பொழுது உண்மை என ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. 2009இல் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து போர் தந்திர நடவெடிக்கைகளை நடத்திய பொழுதில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மாபெரும் ஜனநாயகப் போராட்டத்தினை இப்பொழுதாவது நாம் பெரும் திரளாய் நடத்த முன்வர வேண்டும்.

செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நடத்தப்படும் அமெரிக்க தூதரக போராட்டத்திற்கு அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்.

புகைப்படம்: அமெரிக்க கொடியை 2015இல் அமெரிக்க தூதரகத்தின் முன் எரித்த பொழுதில் எடுக்கப்பட்ட படம்.

11226007_1157625760921548_8122799763410094036_n

Leave a Reply