அமெரிக்கத் தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?

இலங்கை ராணுவத்திற்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவியுள்ளது?

1996ல், விடுதலைப் புலிகள் கைப்பற்றிய முல்லைத்தீவு ராணுவ தளத்தில் தங்கள் புதிய ராணுவ திறன்களை நிரூபித்த பிறகு, அமெரிக்க சிறப்பு படை தொடர்ச்சியான ராணுவ பயிற்சிகளை இலங்கையுடன் மேற்கொண்டது. அது கொரில்லா போரை எதிர்கொள்ள கவனம் செலுத்திய “Operation Balanced Style” என அறியப்படுகிறது. …..

அமெரிக்காவின் உயர்ந்த Green Beret கமாண்டோ அணி ஒன்று இலங்கை சென்று தீவிரவாத எதிர்ப்பு தொழில்நுட்பங்களை வழங்குகிறது, இது “Operation Balanced Style”க்காக இலங்கை வந்த மூன்றாவது அணியாகும், இலங்கை படையணிக்கான பயிற்சி தொடர்பான பென்டகனின் ராணுவ நடவடிக்கை கடந்த வருடம்(1995) மார்ச்சில் தொடங்கியது.

அதுவரை அமெரிக்க ராணுவம் (IMET) International Military Exchange and Training மூலமாக பயிற்சிகளை வழங்கி வந்தது, கடந்த வாரம் அமெரிக்க சிறப்பு படையின் இலங்கை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, அது கடந்த புதன் கிழமை அமெரிக்க அறிவித்த தீவிரவாத குழுக்களின் பட்டியலில் LTTE இடம்பெற்றதால் மட்டுமல்ல, கொழும்பு-வாஷிங்டன் உறவின் முக்கியத்துவம் பற்றி ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசு தலைவர்களின் பிரச்சாரமுமே காரணமாகும்” என்று Lt. Col ஹரால்ட் மைக்கல் பூர் அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரி The Sunday Times ற்கு பேட்டி தருகிறார்,

இது இலங்கை அமெரிக்கா இடையிலான உறவைப் பற்றிய சமகாலத்திய பத்திரிக்கை ஆதாரமாகவும் விளங்குகிறது.

விடுதலைப் புலிகள் 2000ல் வன்னியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததையொத்த நிகழ்வாக, அமெரிக்கா “Operation Flash Style” ஐ தொடங்குகிறது, இதில் அமெரிக்க ராணுவ அணி இலங்கைக்கு பல பயிற்சிகளை வழங்குகிறது, இது தவிர அமெரிக்க கடற்படை சீல் அணி ஒன்று அதன் சிறப்புப் படகு பிரிவின் மூல பயிற்சிகளை வழங்குகிறது, அமெரிக்க விமானப்படையை சேர்ந்த Special Operations Squadron (6th SOS) அணி ஒன்றும் பயிற்சியளிக்கிறது, முக்கியமாக அமெரிக்க ராணுவத்தின் மூன்றாவது படைப்பிரிவின் உளவியல் நடவடிக்கை குழு ஒன்று இலங்கை ராணுவ உயரதிகாரிகளுக்கு உளவியல் பயிற்சிகளையும் வழங்குகிறது.

11025225_1057394060944719_2230051232811714838_o

அமைதிப் பேச்சுவார்த்தையும் அமெரிக்க-இலங்கை ராணுவ உறவும்.

புலிகள் கூடுதலான பகுதிகளைக் கைப்பற்றிய நிலையிலும் 2001 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமசிங்கே அரசுடன், போர் நிறுத்த உடன்படிக்கைக்கு வருகிறார்கள். அமைதிப் பேச்சுவார்த்தை சமயங்களில் கூட அரசு அமெரிக்க ராணுவ தலையீட்டை சிங்களத்திற்கு ஆதரவாக வலுப்படுத்தியே வந்திருக்கிறது, 2002 மார்ச்சில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஆஷ்லே வில்ஸ் இலங்கைக்கு வழங்கிவரும் ராணுவ பயிற்சி பற்றி மட்டுமல்லாது பீரங்கிகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான நிதியுதவிகளையும் உறுதிப்படுத்துகிறார்.

மற்ற அமெரிக்க அதிகாரிகளால் (வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பெளச்சர், தெற்கு ஆசியாவின் துணைச் செயலாளர் கிறிஸ்டினா ரொக்கா, மாநில துணை செயலாளர் ரிச்சர்ட் அர்மிடக் உட்பட) மேற்கொள்ளப்பட்ட இதைப்போன்ற நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் அமைதி பேச்சுவார்த்தையை சீரழிப்பதாக இருந்தது, துணைச் செயலாளர் கிறிஸ்டினா ரொக்கா அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் சென்ற மார்ச்சில் இலங்கை வந்து வெளிப்படையாக “ராணுவ கூட்டு நடவக்கை , மற்றும் பயிற்சிகளுக்காகவே” இலங்கை வந்ததாகத் தெரிவிக்கிறார்

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 7 மாதங்கள் கழித்து, 2002 ன் இறுதியில் 26 பேர் கொண்ட அமெரிக்க பசிபிக் கமாண்டர் படையணி இலங்கை சென்று ராணுவ, கப்பல் மற்றும் விமானபடையின் “திறன்கள், பயன்கள் மற்றும் தேவைகள்” அடிப்படையில் விரிவான ஆய்வை மேற்கொண்டது, திரிகோணமலையின் தெற்கு கடற்கரை புலிகளின் வசம் இருப்பதாக அது குறிப்பிடுகிறது, அமைதி ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்த போதும், அமெரிக்க ராணுவம் இலங்கையை இது நாட்டின் முக்கியமான பகுதி என்றும், அதை மீட்டெடுக்கும் பொருட்டு போரை முன்னகர்த்த வேண்டும்” என்றும் பரிந்துரைக்கிறது.

அமெரிக்காவின் அதிமுக்கிய படையணி திரிகோணமலையின் தெற்கு பகுதி புலிகளின் கொரில்லா யுக்தி ரீதியிலான கடற்ப்பகுதியாக இருப்பதால் புலிகளிடமிருந்து இப்பகுதியை பாதுகாப்பு படையணியால் மீட்கப் பட வேண்டும் என அறிவிக்கிறது.இலங்கை கடற்படை இப்பொழுது இருக்கும் பலவீனமான நிலையை கண்டிப்பாக சமன் செய்ய வேண்டும்’ எனவும் எச்சரிக்கிறது. இப்பகுதியை கட்டுக்குள் வைக்காவிட்டால் திரிகோணமலை துறைமுகம் எப்போதும் தோல்வியான ஒன்றாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கிறது”. இவ்வாறு நடந்து கொண்ட அமேரிக்கா எப்படி ஈழத்திற்கு உதவும்? இது போன்ற காரணங்களே அமெரிக்க தூதரகத்தினை முற்றுகை இடும் அவசியத்தினை நமக்கு ஏற்படுத்துகிறது.

11062694_1057858844231574_587375883332968674_o

மார்ச் 12 – 2015 இல் முகநூல் இணையதளம் மூலம் கொடுக்கப்பட்ட பதில்.

 

உணர்வாளரின் கேள்வி: தோழர், அமெரிக்க எதிர்ப்பு, ஐநா எதிர்ப்பு சரியே!! ஆனால் இந்நேரத்தில் இந்திய அரசை நெருக்கடிக்கு ஆளாக்குவதுதானே சரியாக இருக்கும்? ஐநா விசாரணைக் குழுவை அனுமதிக்காத, மாகாண சபை தீர்மானம் குறித்து வாய் திறக்காத, ராணுவ குவிப்பு பற்றி பேசாத இந்தியப் பொறுக்கிகளை அதிகம் அம்பலப்படுத்த வேண்டுமே!!
நம் மீது இறைமை கொண்டாடும் இந்திய பொறுக்கிகளை நாம் இன்னும் உரிமையுடன் எதிர்க்கலாமே!!

 

தோழர். திருமுருகன் காந்தி அவர்களின் பதில்:

இந்தியாவை எதிர்ப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை… இந்தியாவை அம்பலப்படுத்துவது என்பது எந்த விதத்தில் என்பதில் மே 17 இயக்கம் மாறுபடுகிறோம் என்பதை பல அரங்கில் பதிவு செய்ததை இங்கேயும் பதிவு செய்கிறேன்…
இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப் போகிறோமா? அல்லது
இந்தியாவை குற்றவாளியாக்கப் போகிறோமா?.. இந்தியாவை அம்பலப்படுத்துகிறோம் என்றால் யாரிடம் அம்பலப்படுத்துகிறோம்? .. இந்தியர்களிடமா, தமிழர்களிடமா, சர்வதேசத்திடமா?…
இந்தியாவை குற்றவாளியாகவும், இந்தியா சர்வதேச விசாரணையில் விசாரிக்கப்பட வேண்டுமென்பதுவுமே மே17 இயக்கத்தின் கோரிக்கை. இதற்காகவே நாங்கள் போராடவும் செய்கிறோம்.

இந்தியாவிடமோ, அமெரிக்காவிடமோ, இங்கிலாந்திடமோ இனப்படுகொலைக்கான விசாரணைக்கான கோரிக்கை வைப்பதும், இலங்கையிடம் இதே கோரிக்கையை வைப்பதும் வேறல்ல…. குற்றவாளியாகவே இந்தியாவை சர்வதேச அளவில் அம்பலப்படுத்துதல் வேண்டும்.
அதைச் செய்யவேண்டுமென்றால், இந்தியாவைப் பற்றிய விவாதமும், அதற்குரிய ஆதாரமும் மக்கள் மன்றத்தில் வைத்து நிரூபிப்பதும், பிரச்சாரம் செய்வதும் அவசியம். அவ்வகையிலேயே மே17 இயக்கமும் பிரிமென் மக்கள் தீர்ப்பாயத்தில் (2013 டிசம்பர் ஜெர்மனி) இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை முன்வைத்து இந்தியாவும் இனப்படுகொலைக்காக விசாரிக்கப்பட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அடுத்த படியாக நாம் இதை விரிவாக பிரச்சாரம் செய்ய வேண்டும். ஏனெனில் இந்தியாவின் மீதான குற்றச்சாட்டு உள்ளூர் அளவில் பேசுகின்ற அதே நேரத்தில் சர்வதேச மட்டத்தில் எடுத்துச் சென்று அம்பலப்படுத்துவதே அரசியல் செயல்பாடு. தமிழகம், இந்தியா, சர்வதேசம் என மூன்று தளங்களில் இது பதிவு செய்யப்படல் அவசியம். இந்தியாவைக் குற்றவாளியாக்காமல் ஈழ விடுதலை சாத்தியம் கிடையாது..

 

இம்மாதங்களில் நிகழும் நிகழ்ச்சி நிரல்கள் என்பது அமெரிக்காவினால் முடிவு செய்யபட்டு நிர்வகிக்கப்படுகிற நிகழ்வுகளே… இனப்படுகொலை என்பதை மறுத்ததும், மதச்சிறுபான்மையினர் என வரையறுத்ததும், பயங்கரவாதத்தின் மீதான போர் என்றதும், ஒன்று பட்ட இலங்கைக்குள் நல்லிணக்கம் என்பதுவும் அமெரிக்காவினால் ஐ.நா வழியாக நிர்பந்திக்கபடுகின்ற ஒரு நடவடிக்கை. இந்த நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு பலமுனை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை ஒவ்வொரு வாரமும் எங்களது பதிவுகளில் அம்பலப்படுத்தி வருவதை படித்தால் புரிந்திருக்கலாம். இருந்த போதிலும் சுருக்கமாகச் சொல்கிறேன்.

 

  1. இந்தியாவின் யுக்தி என்பது 1வது சட்டதிருத்தம், வடக்கு மாகாண தேர்தல், தமிழர்களுக்கான குறைந்த பட்ச அதிகாரம், ஒன்றுபட்ட இலங்கை., இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பினை பயன்படுத்தல். இலங்கை மீதான விசாரணையை தடுப்பதும், ஈழக் கோரிக்கையை முறியடிப்பதற்கான வேலைகள்.

 

2, அமெரிக்காவின் யுக்தியாக முன்னெடுக்கப்படுவது, இனப்படுகொலை என்கிற வார்த்தையை முற்றிலுமாக நிராகரித்து அகற்றுதல், இலங்கை அரசே ராணுவம்-புலிகள் இருவரையும் விசாரித்தல், இலங்கை அரசே ராணுவம்-புலிகளுக்கு தண்டனையை இலங்கையின் அரசியல் சாசனத்திற்குள் (குற்றவியல் சட்டத்திற்குள் அளித்தல்).. இதன் வழியாக குற்றவாளிகளை கையாளுதல், அதே வேளையில் பாதிக்கபப்ட்ட தமிழ்சமூகம் மீதான தனது செயல்திட்டமாக, தேசிய இனவரையறைக்குள் தமிழர்களை கொண்டு செல்லவிடாமல் தடுத்தல், இதன் மூலம் பிரிந்து செல்லும் உரிமையை தமிழர்கள் சர்வதேச அளவில் முன்னெடுக்காமல் முறியடித்தல், ஈழவிடுதலை சாத்தியமற்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் எந்த வித அதிகாரமுமின்றி இலங்கையர்களாக மட்டுமே வாழ்தல்.

 

இதற்காக போருக்கு பிந்தய நிலையை கையாளும் ‘நல்லிணக்க’ யுக்தியை

நடைமுறைப்படுத்துதல், இந்த நல்லிணக்கம் என்பதை கடந்த காலத்தில் வெள்ளையர்கள் நலனுக்காக வெற்றிகரமாகச் செயல்படுத்திய தென்னாப்பிரிக்கா அரசினை இச்செயல்திட்டத்தில் வைத்தல், என்பதாக விரிகிறது. அதே அளவில் அமெரிக்கா புலிகள் மீதான போரை ‘பயங்கரவாதத்தின் மீதான போராக’ வரையறுத்தது என்பதை பூதக் கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டிய நுண்ணிய நகர்வு. இதன் மூலம் போர் நியாயப்படுத்தப்படுகிறது. நியாயமான கோரிக்கைக்கான போரில் போர்க்குற்றத்தினை இலங்கை ராணுவம் இலங்கை அரசினை மீறி நிகழ்த்தி இருக்கலாம் அல்லது இலங்கை அரசின் ஒரு சிலரின் ஒப்புதலோடு நிகழ்த்தி இருக்கலாம் இருந்த போதிலும் இக்குற்றச்சாட்டினை இலங்கை அரசு (ஸ்டேட்) விசாரிக்கும். இதற்கான பணியை இலங்கைக்குள் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருவதை இலங்கைக்கான / தெற்காசியவிற்கான அமெரிக்க அதிகாரிகள் நாள்தோறும் அறிக்கை விடுவதை கவனிக்க இயலும்.

 

இந்தியாவையும் குற்றவாளியாகச் சேர்த்து ஒரு சர்வதேச விசரணையை ஐ.நாவில் கோருவது என்பதுதான் தமிழக தமிழர்களின் நேர்மையான அரசியலாக இருக்க முடியும். இதை மே 17 இயக்கம் பல தொலைக்காட்சி (தமிழ் – ஆங்கில) பேட்டிகளில் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறோம்,. 2013இல் நேரலையில் இந்தியாவை பொறுக்கி அரசு என்றே வரையறையும் செய்தோம். புதிய தலைமுறை, சன் , சத்யம் , இமையம், நியூஸ்-X ஆகிய தொலைகாட்சிகளில் இந்திய அதிகாரிகளின் பெயர்களோடு அவர்களையும் விசாரிக்க வேண்டுமென்றும் பதிவு செய்திருக்கிறோம். மக்கள் மன்றத்தில் பொது கூட்டங்களில், ஆர்பாட்டங்களில் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதே கோரிக்கையை முன்னெடுத்து கைகோர்க்க விரும்புகிறோம். துரதஸ்டவசமாக பிரிமென் தீர்ப்பாயத்தில் இந்தியா-அமெரிக்கா -இங்கிலந்து குறித்த இனப்படுகொலை கூட்டாளிகள் பற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளாவோ, அது குறித்து விவாதிக்கவோ பலருக்கு மனம் வரவில்லை. அதை மறைக்கவும், புறக்கணிக்கவுமே விரும்பியது மட்டுமே வெளிப்படையாக தெரிந்தது. இந்தியாவை அம்பலப்படுத்த வேண்டுமென்று சொல்லுபவர்கள் கூட இது குறித்து கள்ளமெளனம் காத்தார்கள். மேற்குலகு சார்பு நிலைப்பாடு வெளிப்படையாக முக்கிய தருணங்களில் எடுக்கப்படுகிறது.. வேறெந்த போராட்டத்தினையும் விட அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தினை மே17 எடுக்கும் பொழுது கேள்விகள் அதிகமாக கேட்கப்படுவதும் வாடிக்கையாக இருக்கிறது என்ன செய்ய தோழர்.

 

பல தோழர்களின் குழப்பத்திற்கு ஒரு விளக்கத்தினைப் பதிவு செய்ய விரும்புகிறேன்… ஐ.நாவின் மனித உரிமைக் கமிசனின் வருடாந்திர நிகழ்வு என்பது ஈழ விடியலுக்கான நிகழ்ச்சி நிரலாக போலி பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இது உண்மையல்ல… ஐ.நாவின் மனித உரிமைக் கமிசனின் கூட்டம் அமெரிக்காவினால் தனது பிராந்திய நலனுக்காக பயன்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் இருந்தே இது போன்ற பிம்பம் கொண்டுவரப்பட்டது. 2010, 201இல் இவ்வாறாக இது இல்லை. அமெரிக்கா தெற்காசிய பிராந்தியத்திலும், இலங்கையிலும் காலூன்ற தமிழர்கள் பிரச்சனையை பகடைக் காயாக பயன்படுத்துகிறது. இந்த அமர்வு முடிந்த பின்னர் நிகழும் அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் பல விடயங்கள் புரியும்.

 

கடந்த 2014 ஐ.நா அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்ததாக சொல்லப்ப்ட்ட பின்னர் அடுத்த ஒரு மாதத்திற்குள் இலங்கை-அமெரிக்காவின் ராணுவ பயிற்சி ஒப்பந்தம், வர்த்தக கூட்டுறவு குறித்த பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தன. அதே நேரம் ராஜபக்சே தனது ஆட்சியை மாற்றுவதற்காக அமெரிக்கா முயலுகிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும், அமெரிக்கா தனக்கு சர்வதேச தண்டனை வாங்கித்தர முயலுகிறது, எக்காரணத்திலும் இலங்கையைக் காப்பேன் என்றார். இதற்கு பதிலாக ரணில் விக்கிரமசிங்கே பேட்டி அளிக்கும் பொழுது, அமெரிக்காவின் விசாரணை இலங்கையை பாதிக்காது, மாறாக அது ராஜபக்சேவை வேண்டுமானாலும் பாதிக்கும் என்றார். மேலும் இவ்விசாரணை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு செல்லக் கூடியதல்ல என்றும் பதிவு செய்தார்.

 

கடந்த மாதம் அமெரிக்காவின் அதிகாரி “இலங்கையின் நல்லிணக்க செயல்பாட்டில் முன்னேறி இருக்கிறது” என்று பதிவு செய்திருக்கிறார். “இலங்கையுடன் அமெரிக்கா முரண்பாட்டினை வளர்த்து தனது உறவினையும், தனது நலனையும் கெடுத்துக்கொள்ளாது” என்றும் பதிவு செய்திருக்கிறார். ரணில் அமெரிக்காவின் கைக்கூலியாகவே செயல்படுவார். இதை 2011 மே மாதம் பதிவு செய்த பொழுது எங்களுக்கு கடுமையான எதிர்ப்பும் வந்தது. ரணில் அமெரிக்கா சார்பும், மைத்ரி- சம்பந்தன் வழியாக இந்தியாவின் சார்பும் திணிக்கப்படும். சிங்கள மக்கள் மீது “செபா பொருளாதார ஒப்பந்தத்தின்” சரத்துகள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலமாக சிங்கள மக்களைச் சுரண்டும் முயற்சியை மோடி நாளை(மார்ச்-13-2015) முன்னெடுக்க இருக்கிறார்,… உண்மையில் நமது கோரிக்கை இலங்கையின் உழைக்கும் மக்கள் இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதாகவே இருக்க முடியும்.

 

இந்தியாவிடம் எந்த காலத்திலும் மே17 இயக்கம் கோரிக்கை வைக்காது தோழர். … இந்தியாவின் மீது விசாரணை தேவை, இந்தியா ஒரு கொலையாளி என்பதே எமது நிலைப்பாடு… இந்தியாவை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது தான், நமது வரியை வாங்கி நமக்கு துரோகம் இழைத்த இந்தியாவிற்கு நாம் செலுத்தும் நன்றி கடன்.

ஆகவே இந்தியாவை எதிர்ப்பதற்கும், அம்பலப்படுத்துவதற்குமான பணி வெகு மாதத்திற்கு முன்பிருந்தே துவங்கப்பட்டு மார்ச் மாதத்தில் அதற்கான பணியை ஜெனிவாவில் தமிழக தமிழர்கள் செய்ய வேண்டும்…. பொதுவாக இந்த கூட்டத்தொடரை தமது நலனுக்கு பயன்படுத்தும் அமெரிக்காவின் முகத்திரையை கிழித்தெறிவது அவசியம்.. இந்த ஒரு மாதத்தில் தான் அமெரிக்கா எதிர்ப்பு தீவிரமடையவேண்டும். அமெரிக்கா தன்னை யோக்கியவானாக தமிழகத் தமிழரிடத்தில் காட்ட விரும்பினால் இனப்படுகொலை விசாரனையை வைக்க வேண்டும். இல்லையெனில் அம்பலபடும் …

 

அமெரிக்காவின் மிகக் கடுமையான அதே நேரத்தில் அதிகாரமிக்க தெற்காசியாவின் வலிமை மிக்க அதிகாரியாக இருந்தவர் ராபர்ட் பிளேக்… இவர் தான் புலிகளை ராணுவ ரீதியாகக் கையாள வேண்டுமென்றவர். அமைதிப் பேச்சுவார்த்தை உடைக்கப்பட்டதிலும், புலிகளின் நிதி – ஆயுத வழித்தடங்களையும் முடக்க குழுக்களை ஏற்படுத்தியவர். இந்த நபர் 2009 பிப்ரவரி மாதம் புலிகள் ஒடுக்கப்படுவார்கள் என்று சென்னை பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் முன்பு மேடையில் பேசியவர். ( போர் உச்சத்தில் இருக்கும் தருணத்தில்) … இந்த நபர் எந்த ஒரு தருணத்திலும் தமிழர்கள் போராட்டத்திற்கு பதில் சொன்னவரோ, கருத்து சொன்னவரோ கிடையாது .. சொல்லப்போனால் நம்மை ஒரு பொருட்டாக மரியாதை கொடுத்தவரும் கிடையாது… இந்த நபர் அச்சப்பட்ட தருணம் ஒன்றே ஒன்று தான்.

10708764_1056139691070156_5048409656862231227_o

2013இல் மாணவர் போராட்டம் நடந்த தருணத்தில் ஆயிரத்திற்கும் நெருக்கமான மாணவர்களைத் திரட்டி சாஸ்திரி பவனை முற்றுகை இட்டு, அதன் பின்னர் ப.சிதம்பரம் வீட்டினை முற்றுகை இட்டனர். ப.சிதம்பரம் வீட்டிற்குள்ளும் சில மாணவர்கள் உள்ளே நுழைய முயன்றனர். கதவினைத் திறந்த நிலையும் ஏற்ப்பட்டது. இரு இடத்திலும் புலிக்கொடியும் ஏற்றப்பட்டது. இதைச் செய்த பின்னர் மாணவர்கள் K.F.Cயை முற்றுகை இட்டனர். இந்த நிகழ்வினை மே17 இயக்கத்தின் மாணவ தோழர்கள் ஒருங்கிணைத்திருந்தனர். இந்நிகழ்வு இது நாள் வரை ஊடகத்திலும், புகைப்படமாகவோ வரவில்லை.. இச்சம்பவம் நடந்த இரவில் ராபர்ட் பிளேக் அவசரமாக அறிக்கை தமிழ் மானவர்களை நோக்கி விட்டார் “அமெரிக்க தீர்மானம் திருத்தப்பட்டதில் அமெரிக்காவிற்கு அதிகம் பங்கு கிடையாது, இந்தியாவே இதைச் செய்தது“ என்றார்.. இதை ஏன் சொன்னார்?… மாணவர்கள் போராட்டம் உலகின் எந்த அரசினையும் நிலை குலைய வைக்கும் இத்தருனத்தில் இந்திய அரசு (சாஸ்திரி பவன்), இந்திய அமைச்சர் (ப.சிதம்பரம்), ஏகாதிபத்திய் வர்த்தகம் ( கே.எஃப்.சி) ஆகியவற்றினை ஒரே நேர்கோட்டில் எதிரியாக மாணவன் பார்ப்பது தனது நீண்ட கால நலனுக்கு ஏற்றதல்ல.. மாணவர்கள் தமது மேற்கத்திய பண்பாட்டிற்கு அடிமையாக இருப்பதையே ஏகாதிபத்தியம் விரும்புகிறது. இதனாலேயே கே.எஃப்.சி கடந்த வருடமும் மே17 தோழர்களால் முற்றுகை இடப்பட்டது.. 2013இல் இதை செய்த பொழுது ராபர்ட் பிளேக் பதறியது இதற்காகவே.. அவர் மட்டுமல்ல ப.ச.க புதிய உறுப்பினர் சுப்ரமணிய சாமியும் இதனாலேயே மே17 பொறுக்கிகள் என்று தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு டிவிட்டர் பதிவு செய்தார். அவர் ஒரு படி மேலே சென்று அமெரிக்காவின் சி.ஐ.ஏவிற்கும், என்.ஐ.ஏவிற்கும் தான் மே17 இயக்கத்தினை கவனிக்கச் சொல்வதாக டிவிட் செய்திருந்தார்… (நகைச்சுவையானவர் தான்).. இதை ஏன் இவர்கள் செய்ய வேண்டும்.. இவர்களுக்கு வலிக்கிறது எனில் நாம் சரியாக போராடுகிறோம் என்று தானே அர்த்தம்…. மார்ச் மாதம் எதிர்க்கப்பட வேண்டிய அம்பலபட வேண்டிய ஆற்றல் ஏகாதிபத்தியம். அதை செய்ய விரும்புகிறோம்… இணைந்து கொள்ளுங்கள்..
10854941_1057978777552914_8528806597167736733_o

விளக்கமளிக்க உதவிய சிறப்பான கேள்விக்கு நன்றி தோழர்..

 

திருமுருகன் காந்தி

ஒருங்கிணைப்பாளர்

மே பதினேழு இயக்கம்.

 

புலிகள் எதிர் கொண்ட சர்வதேச சதிகளையும், அது குறித்த விவரங்களையும் புத்தகங்களாக மே பதினேழு இயக்கம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. புலிகளை நேசிக்கும் தோழர்கள் படித்தறிய வேண்டிய புத்தகங்கள் இவை. புத்தகங்களை விரும்புகிற தோழர்கள் தனிச் செய்தியில் தோழர் சுந்தர மூர்த்திக்கு (9841483235) உங்கள் விவரங்களை அனுப்பவும்.

Leave a Reply