கூடங்குளம் கல்பாக்கம் அணு உலையை மூட கோரி இருசக்கர வாகன பேரணி

- in பரப்புரை

கூடன்குளம் அணு உலை எதிர்ப்போம்; தமிழகம் காப்போம் – இரு சக்கரவாகன பிரச்சார ஊர்வலம் சென்னை முழுவதும்

சனிக்கிழமை 19-11-11, காலை 8.00 மணியிலிருந்து மாலை 8 மணி வரை.

துவக்கம் : தி. நகர், செ.தெ நாயகம் பள்ளி. (குறிப்பு- பிரச்சர பனியனுடன் ஊர்வலம் ஆரம்பமாகிறது.

பனியன் வேண்டுவோர் பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்)

அனைவரும் வருக, பெரும் திரளாய் இந்திய அரசை பணியச் செய்வோம். ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு தமிழரும் கூடன்குளத்தில் பட்டினி கிடக்கும் நம் மக்களுக்காக சென்னை வீதிக்கு வரச் சொல்வோம்.

நண்பர்களையும், உறவினர்களையும் பிரச்சாரத்திற்கு அழையுங்கள் .

இது நமது நிலத்தையும், நமது வருங்கால குழந்தைகளையும் காக்க நாம் நடத்தும் போராட்டம்..

இப்போராட்டம் தோல்வி கண்டால் நம் சந்ததிகள் தோற்கும், இணைவோம் . நாம் வெல்வோம் –

மே பதினேழு இயக்கம்…. 9094817952

இரு சக்கரவாகனப் பிரச்சாரம் சென்னையில் துண்டு பிரச்சாரவிநியோகத்துடனும், புகைப்படகாட்சியுடனும் நடைபெற்றது. ஆட்டோ ஓட்டுனர்கள், சிறுதொழில் முனைவோர், பெண்கள், கைவண்டி தள்ளுபவர்கள் என பலதரப்பிலும் சிறு சந்தேகங்களை எழுப்பி விளக்கங்களை கேட்டதும் ஆதரவை தெரிவித்தார்கள். அவர்களுக்கு அணு உலையை எதிர்ப்பதில் இருக்கும் நியாயத்தையும் விட அவர்களுக்கு இந்த அரசிடமும் , அதிகாரிகளிடமும் எந்த நம்பிக்கையும், மரியாதையும் கிடையாது என்பது புலப்பட்டது.

கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளை மூடக் கோரி சென்னை முழுதும் இருசக்கர வாகனப் பேரணி
மே பதினேழு இயக்கம்
நாள்-19-11-2011Leave a Reply