கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி இந்திய அரசு அலுவலகம் முற்றுகை! நாள் – 24/07/2013

- in அணுசக்தி
கூடங்குளம் அணு உலையை திறக்க துடிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மே 17 இயக்கம் 24.07.13 புதன்கிழமையன்று மத்திய அரசு நிறுவனமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு  நடத்திய போராட்டம்.

கோரிக்கைகள்:

1.பாதுகாப்பற்ற,ஊழல் செய்து அமைக்கப்பட்டிருக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும்.
2.இந்திய அரசு அணு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும்.
3.தனியார்மயத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
4.கூடங்குளம் அணு உலையை எதிர்த்து அறவழியில் போராடும் மக்களின் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்.என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை நடைபெற்றது.

இதில் திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த தோழர் தபசிகுமரன் மற்றும் மே 17 இயக்க தோழர்கள்,மாணவரகள் உட்பட நுற்றுக்கும் அதிகமான தோழர்கள் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 90க்கும் அதிகமான தோழர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.அனைவரும் கீர்ம்ஸ் சாலையில் உள்ள ஒரு சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் அவைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply