மாவீரர் நாள் நிகழ்ச்சி – தண்டையார் பேட்டை

- in பரப்புரை
27-11-2013  தேதி தண்டையார் பேட்டையில் நடந்த மாவீரர் நாள் நிகழ்ச்சியில் திரு. வை.கோ.,தோழர் பெ.மணியரசன், தோழர் கோவை இராமகிருஷ்ணன்,மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நைஜீரியாவில் போராளிகள் தங்கள் கோரிக்கைகளைக் கைவிட்டுச் சரணடைந்த பிறகு அங்கு மறுபடியும் இன்றளவும் அத்தகைய போராட்டமோ, கோரிக்கையோ எழவேயில்லை. ஆனால்,வரலாறுகளையும்,அரசியலையும் நுணுக்கமாக ஆராய்ந்தறிந்த விடுதலைப் புலிகளோ “ஆயுதங்களை மவுனிக்கிறோம்” என்று அந்த நெருக்கடியான நேரத்திலும் நெடுநோக்கோடு அறிவித்ததின் பொருள் “தங்களின் குடும்பத்தை, வாழ்வை, உயிரை… இன்னும் எதையும் இழந்தாலும் ஈழவிடுதலை என்ற நோக்கத்தை உயிரோட்டத்தோடேயே நிலைநிறுத்தியிருக்கிறார்கள் .போராட்டம் வடிவம் வேறாகலாம்,ஈழவிடுதலையைத் தமிழினம் ஒருபோதும் கைவிடாது.என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நுணுக்கமான அரசியல் பார்வை ஏராளமிருக்கிறது.” என்று தோழர் திருமுருகன் பல ஆழ்ந்த கருத்துகளை முன்வைத்து நீண்ட உரையை நிகழ்த்தினார்.திரு வை.கோ. அவர்கள் மிகவும் ரசித்துக் கவணித்துக் கொண்டிருந்தார்.திரண்டிருந்த மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

தோழர் பெ.மணியரசன் இழப்பீடாக பேரறிவாளன் உள்ளிட்டோருக்குத் தலா பத்துக் கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பலத்த கரவொலியைப் பெற்றார்.

வழக்கம் போலவே திரு வை.கோ.அவர்களின் உரை உணர்ச்சிகரமாக இருந்தது.பெருந்திரளாக மக்கள் கூடி ஆதரவளித்தனர்.

 

Leave a Reply