கந்தமால் நாள் நினைவு ஒன்றுகூடல்

- in பரப்புரை
கந்தமால் என்ற வார்த்தை பலருக்கு புதிதாக தோன்றலாம். கந்தமால் என்பது இந்துத்துவாவின் ரத்த வெறிக்கு பலியாகி இந்திய சிறையில் கண்ணீரோடு நீதிகேட்டு நிற்கும் மற்றுமொரு மாவட்டம்.

ஒரிசாவில் உள்ள கந்தமால் என்ற மாவட்டத்தில் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன், 2007, 2008 ஆண்டுகளில் ஏழை தலித் கிருஸ்துவர்கள் மற்றும் ஆதிவாசியினருக்கு எதிராக மாபெரும் வன்முறை தாக்குதல்கள் நடந்தது பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவே.

கந்தமாலில் நடந்ததும் குஜராத் படுகொலைகளுக்கு நிகரான ஒரு படுகொலையே. குஜராத் படுகொலைகளை தெரிந்த அளவிற்க்குகூட கந்தமால் படுகொலைகள் வெளியில் தெரியவில்லை. இந்த இரண்டு படுகொலைகளுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இவ்விரு படுகொலையிலும் அப்பாவி மக்களின் ரத்தத்தை ருசிபார்த்தவர்கள் அதே இந்துத்துவ காவி தீவிரவாத பாஜக – ஆர்.எஸ்.எஸ்.- சங் பரிவார் கூட்டமே.

இந்து மதத்தினருக்கு ஆதரவானவர்களாக வெளியில் காட்டிக்கொண்டாலும் மத அடிப்படைவாதிகளான பாஜக ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே எதிரிகள் அல்ல. ஒடுக்கப்படும் இந்துக்களுக்கும் கிருத்துவர்களுக்குமே எதிரிகளாக இருக்கின்றனர். ஈழத்தில் இனப்படுகொலைக்கு ஆளான பெரும்பாலான தமிழர்கள் இந்துக்களாக இருந்தபோதிலும் அதை தடுக்க இதுவரை எந்த முயர்ச்சியும் எடுக்காமல் இனபடுகொலையாலியான இலங்கைக்கு துனைநிர்ப்பவர்களே இந்த பாஜக ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கள்

 ஒரு ஆர்.எஸ்.எஸ் சாமியார் கொல்லப்பட்டார் என்பதையே கந்தமால் வன்முறைக்கு காரணமாக சொல்கின்றனர். அந்த சாமியார் ஆதிவாசி மக்களை கட்டாயப்படுத்தி இந்துமதத்தில் சேர்க்கும் விஷ்வ இந்து பரிஷத் வேலைத்திட்டமான கர் வபசியில் இருந்தவர். அவரின் உடலை விஷ்வ இந்து பரிஷத் 270 கிலோமீட்டருக்கு ஊர்வலமாக கொண்டு சென்றது. அந்த வழியில் தான் இந்த திட்டமிட்ட கலவரம் நடத்தப்பட்டது.

இந்த வன்முறை தாக்குதல்களால் கந்தமாலில் உள்ள தலித் கிருத்துவர்களும் ஆதிவாசியினரும் பட்ட துன்பங்கள் ஏராளம். இம்மாவட்டத்தில் இருக்கும் 600கிராமங்கள் தாக்கப்பட்டன. 6500 வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டது.56,000 மக்கள் வீடிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் அச்சத்தால் ஊரைவிட்டு வெளியேறி வெகுதூரம் சென்றுவிட்டனர். குழந்தைகள் பெண்கள், முதியோர் உட்பட 100 பேருக்கும் மேல் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டனர். 300கிருத்துவ தேவாலயங்கள் அழிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள்,தொண்டுநிறுவன அலுவலகங்கள் அழிக்கப்பட்டது. 10,000 சிறுவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதோடு, இன்னும் நீங்காத மன உளைச்சலோடு வாழ்கின்றனர்.

6 ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் அவர்களுக்கு இழப்பீடு, மறுவாழ்வு அளிக்கப்படவில்லை.இதற்க்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை. பாஜகவை சார்ந்த மனோஜ் பிரதான் என்ற ஒருவர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டு அவருக்கும் மேல் முறையீட்டில் பிணை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் இன்னும் நீதிக்காக போராடி வருகின்றனர். 25 ஆகஸ்டு நாளை கந்தமால் நாளாக நினைவுகூறி வருகின்றனர். அவர்களின் குரல் இன்னும் வெளி உலகிற்கு கேட்கபடாத அவலக்குரலாகவே இருந்து வருகின்றது. இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராடும் கந்தமால் தோழர்களுக்கு தமிழர்கள் நாம் துணை நிற்ப்போம்

நாளை 25-ஆகஸ்டு 2014 மாலை 4 30 மணிக்கு பெங்களூரில் டவுன் ஹால் பகுதியில் கந்தமால் நாள் நினைவு ஒன்றுகூடல் நடைபெறுகிறது. இந்நிகழ்வை பீப்புள்ஸ் சாலிடாரிட்டி கன்சர்ன்ஸ் (Peoples’ Solidarity Concerns) அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கமும் கலந்துகொள்கிறது. பெங்களூரில் வாய்ப்பிருக்கும் தோழர்கள் அவசியம் கலந்துகொள்ளுங்கள்

Join #PROTEST4JUSTICE for Kandhamal Carnage survivors @ Town Hall,Bangalore. 25 Aug. 4:30-6:30 pm. – Peoples’ Solidarity Concerns-Bangalore

 

Leave a Reply