பார்ப்பன பாஜக-வின் தர்மம் வென்றதில், தமிழச்சி நம் சகோதரி அனிதா பலியானாள்.
இது தற்கொலை அல்ல. நீட்-னால் செய்யப்பட்ட பச்சைப் படுகொலை. 1176 மதிப்பெண் எடுத்தும் 196.75 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தும், பார்ப்பனருக்காகவும், பணக்காரர்களுக்காகவும் மட்டுமே நீட்-ஐ நீட்டி முழங்கி உன் உயிரை எடுத்திருக்கிறார்கள்.
தரம் தரம் என்று சொல்லி, 2000 ஆண்டுகளாக பார்ப்பன நீதியே அனைவருக்குமான நீதியாக சொல்லி நீ மருத்துவம் படிக்கும் உரிமையை மறுத்திருக்கிறார்கள். நீ உனக்காக மட்டும் போராடவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காக, குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக போராடினாய்.
நீ நிமிர்ந்த நடையோடு டெல்லிக்கு பயணப்பட்ட போது, நாங்கள் மகிழ்ச்சியோடு கண்டோம் உன்னை. உன்னை முடித்துக் கொண்ட போது வெட்கப்பட்டு நிற்கிறோம். இது அடிமைகளின் தேசம்.
நீ மருத்துவம் மக்களுக்கானது என்று சொன்னாய். எச்.ராஜாக்கள் அது கார்ப்பரேட்டுக்கானது என்று சொல்லி உன்னை கொலை செய்திருக்கிறார்கள்.
சூடு சொரணையுள்ள தமிழர்களே! எழுந்து நில்லுங்கள். ஒவ்வொரு முறையும் சம்பூகன் காலத்திலிருந்து நாமே பலியாகிறோம்.
நீட்-ஐ வேரறுப்போம். கல்வியை மாநில பட்டியலுக்கு வரும் வரை உறுதியுடன் நிற்போம். எங்கள் சகோதரியே! எங்கள் குழந்தையே!
தமிழர்களே! அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராடுவோம். அனிதாவின் இறுதிப் பயணத்தில் ஒட்டு மொத்த தமிழகமும் அணிதிரளட்டும். அனிதா நடத்திய போராட்டத்தை தொடர்வோம்.
1176 மதிப்பெண் எடுத்து, நீட் தேர்வினை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா மரணம் பார்ப்பன பாஜக அரசின் பச்சைப் படுகொலை.
தமிழக மாணவர்களை வஞ்சித்த பாஜக எடுபிடி அதிமுக அரசே! பதவி விலகு!
கல்வி உரிமை மாநிலத்திற்கே சொந்தம். இந்திய அரசே! ஒற்றைக் கல்வி முறை என்ற பெயரில் பார்ப்பனியத்தை திணிக்காதே.
196.75 கட் ஆஃப் எடுத்த அனிதாவுக்கு மருத்துவக் கல்வி இல்லையென்றால் என்னங்கடா உங்கள் நியாயம்? பார்ப்பன CBSE படித்தவனுக்குத்தான் மருத்துவக் கல்வி என்றால் மருத்துவக் கல்லூரிகளை இழுத்து மூடு.
சென்னையில் பாஜக அலுவலகம் முற்றுகை.
செப்டம்பர் 3, 2017 ஞாயிறு காலை 10 மணி
மதுரையில் பாஜக அலுவலகம் முற்றுகை
– மே பதினேழு இயக்கம்