கெட்டிகாரன் புளுகு எட்டு நாளைக்குன்னு ஊர்பக்கம் ஒரு பழமொழி உண்டு அது யாருக்கு பொறுந்துதோ இல்லையோ நம்ம ஊர் அரசு சார் விஞ்ஞானிகளுக்கும் அரசு சார் அதிகார வர்க்க ஆதிகாரிகளுக்கும் சரியா பொருந்தும். உதாரணத்திற்கு கூடங்குளம் அணு உலை சிறபாக செயல்படுமுன்னு மூச்சுக்கு முன்னூறு தடவ கூவினாங்க ஆனா பாருங்க வருசத்துல 360 நாளும் பழுதாகி கிடக்கு 5 நாளு அணுமின் நிலைய அதிகாரி சுந்தர் வாயால அணுமின் நிலையத்த ஓட்டுறார். மற்றபடி அது செத்த பொணம் தான். இப்படி இவர்களின் பித்தலாட்டம் இருக்க இப்ப
கொங்கு பகுதியில் கெயில் நிறுவனம் சார்பாக விவசாய நிலத்தில் தான் பைப் போடுவாங்களாம்.ஏண்டா இப்படி விளைநிலங்களில் பைப் போடுறீங்கன்னு கேட்டா நாங்க காசு கொடுத்து நிலம் வாங்குறோமுன்னு தெனா வெட்டா பதில் சொன்னாங்க, மக்கள் சுதாரிச்சி நிலம் தரமுடியாதுன்னு சொன்னதுக்கு அப்புறம் இல்லயில்ல நாங்கபாட்டுக்கு தோண்டி பைப்லைன் போட்டுட்டு மறுபடியும் நிலத்தை உங்களுக்கே கொடுத்துருவோம் நீங்க விவசாயம் பார்க்கலாம் ஒரு பிரச்சனையுமில்லன்னு அண்டபுளுக அவுத்துவுடுறாங்க..
இவுங்க போடுற பைப்லைன்க்கு சிறு சேதாரம் தெரியாம யாராவது ஏற்படுத்தினால் கூட அவுங்களுக்கு மரணதண்டனை வரை கொடுக்கலாமுன்னு உச்சபட்ச சட்டம் வைச்சியிருக்கிறது எதனால். அது போக பைப்லைன்ல விபத்தெல்லாம் வராதுன்னு புளுகுமுட்டைய அவுத்துவுடுறாங்க இந்த அரசு விஞ்ஞானிகள். ஆதாகப்பட்டது அமெரிக்கா கனடா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே இந்த விபத்துகள் தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கு அந்த நாடுகளினலேயே இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. உதாரணத்திற்கு
கடந்த வருடத்தில் மட்டும் அமெரிக்காவில் 27 இடங்களில் இந்த பைப்லைன் விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் மாசுபடுதல், மக்களின் வீடுகள் சேதமடைதல், பூகம்பம் வருவது காடுகள் தீப்பிடித்து நாசமாவது, அணைகளில் விரிசல் ஏற்படுவது, நிலம் பாழாய் போவதுன்னு ஏகப்பட்ட பேரழிவுகளை உண்டாக்கி இருக்கிறது. இதற்கெதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து ஆங்காங்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மை நிலவரம் இப்படியிருக்க எதுவுமே ஆகாதுன்னு மக்களுக்கு எதுவும் தெரியாதென்று நினைத்துக்கொண்டு இந்த அரசு விஞ்ஞானிகள் உண்மைக்கு புறம்பாக பேசிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கெல்லாம் மக்கள் மயங்கிவிடாமல் தொடர்ந்து நம் நிலத்தை நீரை காக்க களத்தில் சமரசமின்றி போராடி கெய்ல் பைப்லைன் திட்டத்தை விரட்டி அடிக்க வேண்டும்.
குறிப்பு:முதல் படம் பைப் லைன் விபத்தால் மஞ்சள் நதியில் கலந்த கழிவு நீர் மற்றும் ஆயிலை அகற்றும் ஊழியர்கள்.
இராண்டாவது படம் கனடியான் எல்லைபகுதியிலுள்ள மிஸ்ஸீபி (Mississipi) எனுமிடத்தில் நடந்த கேஸ் பைப்லைன் விபத்தில் தீபிடித்து ஒரு காடே அழிந்து நாசமானது.