நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக அய்யா வே ஆனைமுத்து அவர்களின் “இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மோசடி” புத்தகம்

- in நிமிர்

நிமிர் பதிப்பகத்தின் வெளியீடாக அய்யா வே ஆனைமுத்து அவர்களின் “இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மோசடி” புத்தகம்.

சென்னை புத்தக காட்சியின் நிமிர் அரங்கில் (அரங்கு எண்: 364, 365) கிடைக்கும்.

விலை: 300 (10% கழிவு உண்டு)

அய்யா வே ஆனைமுத்து அவர்களின் உரையிலிருந்து…

“சட்டம் பற்றி நமக்கு ஏன் கவலை? அதுவும், அரசியல் அமைப்புச் சட்டம் பற்றி நமக்கு என்ன தெரியும்? என எந்த ஒரு தமிழரும் எண்ணக் கூடாது என்பதே என் கவலை.

தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றித் துல்லியமாக அறியவேண்டும். அரசியல் பொருளாதாரச் சிந்தனையுடன் இச்சட்டத்தை ஒவ்வொருவரும் ஆய்வு செய்ய வேண்டும்; விவாதிக்க வேண்டும்; தெளிவு பெற வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வெகுமக்களுக்கு எதிரானது. ஒருசேரப் பாட்டாளிகளாகவும் கீழ்ச்சாதி மக்களாகவும் உள்ள வெகுமக்களுக்கு – 90 விழுக்காடு மக்களின் விடுதலைக்கு எதிரானது என்பதை இதன்மூலம் ஒவ்வொருவரும் உணர முடியும்.
தந்தை பெரியார் இதைத் தெளிவாக விளக்கினார். அவருடைய சிந்தனைத் தளத்தில் நின்று நான் ஓரளவு இதில் தெளிவுபெற்றேன்.

இந்நூலின் இறுதிப் பகுதியில் அமைத்துள்ள தந்தை பெரியாரின் உரை இதனை எண்பிக்கும்.

நீங்களும் தெளிவுபெற முயலுங்கள். தெளிவு மேலும் மேலும் வேண்டப்படும். அப்போது வெகுமக்களின் விடுதலையில் உண்மையான ஆர்வம் உள்ள நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்; விவாதிப்போம்; தெளிவு பெறுவோம்.”

தொடர்புக்கு
8939782116

Leave a Reply