குஜராத்தில் மோடியின் வெற்றியும், பெருநிறுவனங்களின் கொள்ளையும் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

குஜராத்தில் மோடியின் வெற்றியும், பெருநிறுவனங்களின் கொள்ளையும்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

குஜராத் மாடலை ஊக்குவிக்க ஒன்றிய அரசிடமிருந்து நேரடியாக தனியார் நிறுவனங்களுக்கு 2019-20 ல் வழங்கப்பட்ட தொகை ரூ.837 கோடி நிதி என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது.

தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசுத் துறை நிறுவனங்களுக்கும் சட்டமன்றத்தின் வரவு செலவு அறிக்கைகளில் வராமல் நிதிகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசிடம் இருந்து நேரடியாக பெருமளவு நிதியைப் பெற்ற குஜராத்தில் செயல்படுத்தும் நிறுவனங்களில், மாநில அரசு நிறுவனங்கள் (ரூ. 3,406 கோடி), மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் (ரூ. 3,389 கோடி), மத்திய அரசு நிறுவனங்கள் (ரூ. 1,826 கோடி) ஆகியவை அடங்கும். மற்றும் அரசு மற்றும் தன்னாட்சி பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் (ரூ. 1,069 கோடி) ஆகியவை அடங்கும்.

ரூ.16500 கோடி அளவிற்கான திட்டங்களை குஜராத் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணத்தின் போது அறிவித்தார் மோடி. அதற்குப் பிறகே தேர்தல் நாளை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

உயர் ஆதிக்க சாதியினரின் கடைகளில் 96.8% பேர் தலித்துகளுக்கு தேநீர், உணவுப் பொருள் பரிமாற தனித்தனி பாத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். மாநிலம் முழுவதும் தலித்துகளுக்கு எதிராக 98 வகையான தீண்டாமை உயர்சாதி சமூகங்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தலித் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு 53.8% அரசு தொடக்கப் பள்ளிகளில் அதிகமாக இருப்பதாக அறிக்கை காட்டுகிறது.

இலவசங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சி சீரழிவதாக மிகவும் வருந்தியவர் தான் மோடி. அது மட்டுமல்லாமல் இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாசகவின் வழக்கறிஞரே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வளவு கடுமையாக எதிர்த்தவர்கள் தான் தேர்தல் அறிக்கையில் இலவசக் கல்வி, கிரைண்டர், சிலிண்டர், மருத்துவம், பெண்களுக்கு இலவச பைக், குறைந்த விலை எண்ணெய் என இலவசங்களை அள்ளியிறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டது. கொஞ்சமும் கூச்சமேயில்லாமல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டே இருக்கும் மோடியும், பாசகவினரும் எழுப்பும் வீர முழக்கமே குஜராத் மாடல்.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply