பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டும் அனல் மேலே பனித்துளி – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டும் அனல் மேலே பனித்துளி
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், அந்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சிப்பதில் வரும் சிக்கல்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை தாண்டி, எப்படி இந்த கடினமான கட்டத்தை எதிர் கொண்டு கடந்து வர வேண்டும் என்பது தான் இப்படத்தின் முக்கிய கரு.

“உயிரை விட மானம் பெருசு தான். ஆனா என்னை பொருத்த வரைக்கும் மானம்கிறது என் உடம்புலயும் நான் போடுற டிரஸ்லையும் இல்ல; நான் வாழுற வாழ்க்கைல தான் இருக்கு.” என்கிறது. இதனை பாதிக்கப்படும் பெண்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, இதுநாள் வரையில் கற்பிக்கப்பட்ட அனைத்து பிற்போக்கான கருத்துக்களையும் தூக்கியெறிந்து விட்டு இனி வரும் காலங்களில் எதற்கும் அஞ்சாமல் இது போன்ற அநியாயங்களை தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.

நம் சமூகத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று அவர்களின் நிலையை புரிந்து உறுதுணையாக இருப்பதாக திரையில் ஒரு கதாப்பாத்திரம் தோன்ற 30 வருடங்கள் ஆகிறது. நிஜ வாழ்க்கையில் அவ்வளவு எளிதில் ஒரு சாமானிய பெண்ணின் வாழ்வில் அப்படி ஒரு ஆதரவு சுலபத்தில் கிடைப்பதில்லை.

மேலும் வாசிக்க:

மே 17 இயக்கக் குரல்
9884864010

Leave a Reply