தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 15-வது நினைவுநாளில் (நவம்பர் 2, 2007) மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 15-வது நினைவுநாளில் (நவம்பர் 2, 2007) மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஈகம் அளப்பரியது. போர்க்காலத்திலும் சரி, போர் நிறுத்தக் காலத்திலும் சரி சிங்கள பௌத்த இனவெறி அரசால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. போர் வீரர்களாக இருப்பவர்களை கொல்வது மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தும் விடுதலைப்புலிகள் இயக்க தோழர்களையும் குறிவைத்து கொலை செய்வதன் மூலம் தங்களுடைய இனவெறியை தொடர்ந்து பறைசாற்றி கொண்டிருந்த சிங்கள பௌத்த இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான போராளிகளில் ஒருவர்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆவார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தனி ஈழக் கோரிக்கை குறித்து உலக அளவில் உள்ள மற்ற இயக்கங்களுடனும், அரசு உங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தங்களுக்கான ஆதரவை பெருக்குவதற்காகவும், தமிழீழ மக்களுடைய அரசு எவ்வாறு இயங்கும் என்பதை உலகிற்கு எடுத்து காட்டுவதற்காகவும் அமைக்கப்பட்ட அரசியல் துறையின் பொறுப்பாளராக இருந்த பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்குரிய போராளிகளில் ஒருவர் ஆவார்.

“தமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும், அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும், அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும், ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டு கொண்டேன். இலட்சியப்போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.” என்ற தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் கூற்றில் இருந்து பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் யார் என்பதை உணரலாம்.

1993-ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் சமாதான பேச்சுவார்த்தை குழு தலைவராகவும் பொறுப்பேற்று செயல்பட்டவர். 20 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இயங்கியவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆவார்.

2007 நவம்பர் 2-ம் நாள் ஆண்டு கிளிநொச்சியில் சிங்கள பௌத்த இனவெறி இராணுவம் நடத்திய தாக்குதலில் லெப்.கேணல் அலெக்ஸ், மேஜர் மிகுதன், மேஜர் செல்வம், மேஜர் நேதாஜி, லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன் ஆகியோருடன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் வீர மரணம் அடைந்தார்.

தமிழீழத்தின் விடுதலைக்கு தங்களை விதையாய் தூவிய இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். அந்த இயக்கத்தின் ஈக வரலாற்றில் குன்றின் மேல் இட்ட விளக்காய் ஒளிவிடும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் ஈகத்திற்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply