பாபர் மசூதி வரிசையில் இந்துத்துவாவின் இலக்காகிய ஞானவாபி மசூதி! – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

பாபர் மசூதி வரிசையில் இந்துத்துவாவின் இலக்காகிய ஞானவாபி மசூதி!
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

கடந்த 12-09-2022 அன்று ஜாமியா மசூதி நிர்வாக குழு தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்து, “மசூதியில் சென்று காசி விசுவநாதரை வழிபட வேண்டும் என்று 5 பெண்கள் அளித்த மனு விசாரணைக்கு உகந்தது” என்று ஒரு அதிசய தீர்ப்பை வாரணாசி நீதிமன்றம் அளித்திருக்கிறது

காசி விசுவநாதர் பாதையை ஒட்டி அன்னை சிருங்கார் தேவி, அனுமான் உள்ளிட்ட கண்ணுக்கு புலப்படாத பல தெய்வங்கள் இருப்பதாகவும் [வழக்கு தொடுத்த] இந்தப் பெண்கள் கூறியுள்ளனர். இங்கு எல்லா சிலைகளும் இருப்பதை உறுதி செய்ய ஒரு வழக்கறிஞர் ஆணையரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்ற தனிப்பட்ட விண்ணப்பம் ஒன்றையும் இவர்கள் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி தான் தற்போது ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து உள்ளது நீதிமன்றம்.

16-ஆம் நூற்றாண்டில் காசி விஸ்வநாத கோயிலை இடித்து முகலாய மன்னர் ஔரங்கசீப் ஞானவாபி மசூதியை கட்டியுள்ளார் என்று கூறி, உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் வாரணாசி நீதிமன்றங்களில் வாரணாசியில் உள்ள சாதுக்களால் 1991-ஆம் ஆண்டே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் தடையுத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பின் தொடர்ச்சியாக 2021-ஆம் ஆண்டு பெண்கள் ஐவர் வழிபாட்டாளர்கள் என்ற தகுதியின் அடிப்படையில் ஞானவாபி மசூதிக்கு எதிராக இந்த உரிமையியல் வழக்கை தாக்கல் செய்தனர். 1991 வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டத்தின் கீழ் விதிவிலக்கான அயோத்தி பாபர் மசூதியின் 2019-ன் தீர்ப்பை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதி வழக்கில் முக்கிய முன்தீர்ப்பாக எடுத்துக் கொண்டுள்ளது.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பின் நீட்சியாகவே ஞானவாபி மசூதி தொடர்பான மனுவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு கருதப்பட வேண்டும். ஒன்றிய அரசின் சிறப்பு சட்டம், சிறுபான்மை மக்களின் வக்பு சட்டம் மற்றும் உத்திரப்பிரதேச அரசின் கோவில் சட்டங்களை இந்து மதத்தின் வழிபாட்டு உரிமை பின்னுக்கு தள்ளிவிட்டுள்ளதை இத்தீர்ப்பில் தெளிவாக காணலாம்.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply