பட்டிமன்றங்களும் ஆணாதிக்க சிந்தனையும் – மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

பட்டிமன்றங்களும் ஆணாதிக்க சிந்தனையும்
– மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை

“அம்மா நீங்க பேசும் போது சொன்னீங்க தாலி நாய் கழுத்துல மாட்டுன சங்கிலி மாதிரினு, ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோங்க ஊருக்கு நாய் புடிக்குற வண்டி வந்தா எல்லா நாயையும் புடிப்பாங்க கழுத்துல சங்கிலி இருந்தா அது யாருக்கோ சொந்தமான நாய்னு விட்டுட்டு போயிடுவாங்க, அதுக்கு தான் இதுவும்” என்று கூறி விடைபெற்றுக்கொண்டார். உடனே அந்த அரங்கம் முழுவதும் இருந்த அனைவரும், பெண்கள் உட்பட, கைதட்டி ரசித்துச் சிரித்தனர்.

ஒரு பெண் பிறந்ததில் இருந்து தந்தைக்கு அடிமை, திருமணமான பிறகு கணவனுக்கு அடிமை, வயதான பின் மகனுக்கு அடிமை எனும் மனுதர்ம கோட்பாட்டை வெவ்வேறு வடிவத்தில் ஏற்றுக்கொண்டு, அந்த பிற்போக்கான மனநிலையிலேயை அறிவார்ந்தவர்கள் எனும் நிலையில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் தமிழ் இலக்கிய மன்றத்தில் உரையாற்றும் போது “மஞ்சள் முகமே வருக, மங்கள விளக்கே வருக” என ஆரம்பிக்கும் திரையிசை பாடல் ஒன்றை பாடி “அந்த காலத்தில் எல்லாம் பெண்கள் மஞ்சள் பூசிய முகத்துடன் மங்களகரமாக பார்க்க லட்சனமாக இருந்தார்கள். ஆனால் இப்போது இருக்கும் பெண்கள் அழகுப்படுத்தி கொள்கிறேன் என்ற பெயரில் குரங்கு மாதிரி மாறுகிறார்கள்” என்று பேசுகிறார்.

மேலும் வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010

Leave a Reply