பருத்தி விலையால் பாழாகும் திருப்பூர் – மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

பருத்தி விலையால் பாழாகும் திருப்பூர்
– மே 17 இயக்கக் குரல் தலையங்கம்

திருப்பூரில் உள்ள 10 சதவீத பெரிய நிறுவனங்களினால் இந்த பருத்தி விலையேற்றம், நூல் விலையேற்றத்தை ஈடுசெய்ய இயலுகிற நிலையில் 90 சதவீத சிறு-குறு தொழில்கள் நசிந்து போகின்றன என்பது மிகப்பெரும் கவலைக்குறியதே.

வடநாட்டில் துணி உற்பத்திக்கு பதிலாக நூல் ஏற்றுமதியில் நிறுவனங்கள் ஈடுபட ஆரம்பித்துள்ளன. நூல் ஏற்றுமதி செய்வதால் லாபத்தில் இழப்பை சம்பாதிப்பதில்லை. மாறாக ஆடை உற்பத்திக்கான அடிப்படை கச்சாப்பொருட்களை ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு ஊக்குவிக்கிறது. இதற்கான வரி குறைப்பு மட்டுமல்லாமல் வரி திரும்பப்பெரும் ஊக்கத்தொகையும் உள்ளதால் நூல் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. …பருத்தியை இறக்குமதி செய்வதற்கான வரியை குறைத்த போதிலும் நூல் விலையில் மாற்றமில்லாமல் மேலும் அதிகமாக உயரவே செய்தது.

நேரடியாக எவ்வளவு உற்பத்தி நடந்துள்ளது என்பதைப் பற்றிய தொடர்பும் இல்லாமலேயே பொருட்களின் விலையை ஏற்றி இறக்கக்கூடிய வணிக பரிமாற்றமும், உண்மைக்கு மாறான உற்பத்தி அளவும் வைத்து பங்குச் சந்தையில் சூதாட்டத்தை பனியா எனும் குஜராத் மார்வாடி சமூகங்கள் செய்து வருகின்றன.

நூறாண்டுகளுக்கு முன்பே யூக வணிகத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் லட்சம் ரூபாய் பணத்தை ஈட்டிய இந்த பனியாக்களே இன்றும் இத்தொழிலின் மூலப்பொருட்களின் வணிகத்தை கட்டுப்படுத்துகின்றனர். இந்த நிலையே இன்று திருப்பூர் போன்ற தமிழ்நாட்டின் ஆடை உற்பத்தியை நெருக்கடிக்குள் தள்ளி இருக்கின்றன.

வாசிக்க

மே 17 இயக்கக் குரல்
9444327010 

Leave a Reply