தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் இறுதி நிகழ்வில் மரியாதை செலுத்தப்பட்டது

- in வீரவணக்கம்

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக 18-08-2022 அன்று காலமானார். 77 வயதான ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர், இலக்கியவாதி. தமிழை சுவாசித்த ஆகச் சிறந்த தமிழ் ஆளுமை மிக்கவர். தமிழீழ ஆதரவாளர். இந்துத்துவவாதிகளின் ஆன்மீக புரட்டை அம்பலப்படுத்தியவர். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு. அன்னாரது இறுதி சடங்கு இன்று (19-08-22) அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓவியர் தோழர் புருசோத்தமன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply